ஃபேன் பாய் என்பதையும் தாண்டி ஒன்னு இருக்கு.. குட் பேட் அக்லி பற்றி ஜிவி பளீச்

by Rohini |
gv ajith
X

ஒரு பக்கம் நடிகராக இன்னொரு பக்கம் இசையமைப்பாளராக இரண்டையுமே பெரிய அளவில் செய்து கொண்டு வருகிறார் ஜி வி பிரகாஷ். நடிகராகவும் வெற்றிகளை கொடுத்து வருகிறார். இசையமைப்பாளராகவும் வெற்றிகளை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து இருக்கிறார் ஜீவி பிரகாஷ். கிரீடம் படத்தில் தன்னுடைய இனிமையான இசையால் அந்த படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்தவர் ஜி னி.

அந்த படத்தில் அமைந்த ஒவ்வொரு பாடலும் சூப்பர் ஹிட் .இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்களாக இருக்கின்றன .அதன் பிறகு மீண்டும் குட் பேட்அக்லி திரைப்படத்தில் இசை அமைப்பாளராக இணைந்திருக்கிறார் ஜீவி பிரகாஷ். முதலில் இந்த படத்திற்கு இசையமைக்க இருந்தவர் தேவி ஸ்ரீ பிரசாத் .அவருக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக தேவி ஸ்ரீ பிரசாத் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

அதன் பிறகு தான் ஜிவி பிரகாஷ் உள்ளே வந்தார். ஏற்கனவே ஆதிக், ஜீவி இருவருமே மார்க் ஆண்டனி திரைப்படத்தில் சேர்ந்து மிரட்டினார்கள். அதன் பிறகு மீண்டும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார்கள். அதனால் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீப காலமாக ஜீவி இசையில் இன்னிசை என்பதையும் தாண்டி ஒரு வெறித்தனமான இசையும் வெளிப்பட்டு வருகிறது.

அதனால் அஜித்துக்கு இவருடைய இசை கூடுதல் பலத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் இன்னும் எகிர வைத்திருக்கிறது. சமீபத்திய ஒரு பேட்டியில் படத்தைப் பற்றி ஜிவி பிரகாஷ் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.

ஒவ்வொரு நடிகர்களுக்குமே ஒரு படம் அமையும். அதாவது ரசிகர்களுக்காக ஒரு படம் பண்ண வேண்டும் என்ற வகையில் படத்தை கொடுத்து இருப்பார்கள். ரஜினிக்கு எப்படி ஒரு பேட்ட திரைப்படம் அமைந்ததோ அதேபோல அஜித் ரசிகர்களுக்காக நடித்த படமாக இந்த குட் பேட் அக்னி திரைப்படம் அமைந்திருக்கும். ஃபேன் பாய் என்பதையும் தாண்டி ஒரு கேங்ஸ்டர் லைனும் இந்த படத்தில் இருக்கிறது .அதை வைத்தே தான் படம் நகரப்போகிறது. கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களுக்கான படமாகவும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடப் போகும் படமாகவும் இருக்கும் என ஜிவி பிரகாஷ் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story