குறைந்தது 3 பிளாக்பஸ்டர் ரெடி!.. புது தலைப்பு என்னவா இருக்கும்?.. ஜிவி கொடுத்த அப்டேட்!..

தமிழ் சினிமாவில் அமரன் திரைப்படத்தின் மூலமாக டாப் நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உண்மை கதையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார்கள்.
படம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
பாடல்கள் அனைத்துமே இப்படத்தில் மிகப்பெரிய ஹிட்டு கொடுத்தது. கடந்த வருடம் ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு திரைப்படங்களுமே மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் தொடர்ந்து பெரிய பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் இசையமைப்பதற்கு ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து வருகின்றது.
தொடர்ந்து இசையமைப்பாளராக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு தொடர்ந்து படங்களில் இசையமைப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே25 என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் அவர்கள் தான் இசையமைத்து வருகிறார்கள். இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருந்த ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்ததாவது 'அமரன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இந்த திரைப்படத்தில் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கின்றது.
படத்தின் பாடல்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுவிட்டது. நான்கு பாடல்கள் ரெக்கார்டிங் முடிந்து தயார் நிலையில் இருக்கின்றது. இதில் மூன்று பாடலாவது பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று உறுதியாக கூறுகின்றேன். படத்தின் டைட்டில் தொடர்பான அறிவிப்பு விரைவில் உங்களுக்கே தெரிய வரும். மேலும் சுதா கொங்கரா உடன் மீண்டும் பணியாற்றுவது வேற லெவலில் இருக்கின்றது.. ஏனென்றால் அவர் எனக்கு முதல் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தவர் அதனால் இந்த திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் தான்' என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.