
Cinema News
STR49: ஜிவி பிரகாஷை தூக்கிட்டு அவரா?.. வெற்றிமாறனுக்கு என்னாச்சி?!.. சரியா வருமா?!…
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்:
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும் இதுவரை அவர் இயக்கியது 7 படங்கள்தான்.
தற்போது சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டு புரமோ ஷூட் எடுக்கும் வேலையெல்லாம் நடந்தது.
ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சிம்புவும், வெற்றிமாறனும் அதிக சம்பளம் கேட்டதுதான் அதற்கு காரணம் என செய்திகள் வெளியானது. அதன்பின் ஒருவழியாக வெற்றிமாறன் தாணுவிடம் பேசி தற்போது இந்த புராஜெக்ட் மீண்டும் டேக்ஆப் ஆகியிருக்கிறது. இப்படத்தின் புரமோ வீடியோ அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என கலைப்புலி தாணுவே அதிகாரப்பூர்வமாகவே தற்போது அறிவித்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இல்லாத STR49:
இந்நிலையில்தான் இந்த படத்தில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. வெற்றிமாறன் இதுவரை இயக்கிய பொல்லாதவன், வடசென்னை, விசாரணை, ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்தார். இருவரின் காம்போவில் அசத்தலான பாடல்கள் ரசிகர்களுக்கு கிடைத்தது.
அதுவும் அசுரன் படத்தில் ஜிவி பிரகாஷ் கொடுத்த பின்னணி இசை பலராலும் பாராட்டப்பட்டது. அந்த பின்னணி இசையை அப்படியே தெலுங்கிலும் பயன்படுத்தப்பட்டது. விடுதலை, விடுதலை 2 படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில்தான் சிம்புவும் மற்றும் வெற்றிமாறனும் இணையும் இந்த புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியே கசிந்திருக்கிறது.
இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. ஒருவேளை அனிருத்தான் வேண்டுமென சிம்பு சொன்னாரா என்பது தெரியவில்லை. வெற்றிமாறன் படத்திற்கு அனிருத் இசை அமைத்தால் அது சரியாக வருமா என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது
.