தொடர் பஞ்சாயத்து... கணவரை பிரியும் ஹன்சிகா மோத்வானி?..

Hansika: கல்யாண வாழ்க்கையில் திடீர் பிரச்னைகள் தொடர்ந்து ஏற்படுவதால் கணவரை விட்டு பிரிய நடிகை ஹன்சிகா மோத்வானி முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தன்னுடைய பப்பலி நடிப்பால் வரவேற்பை பெற்றவர் ஹன்சிகா மோத்வானி. தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் அவருக்கு சின்ன குஷ்பூ என்ற செல்ல பெயரே வைத்தனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் ஆனார்.
ஒரு கட்டத்தில் சிலம்பரசனுடன் காதலில் இருந்தார். இருவரும் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் பிரேக்கப் ஆனது. அதை தொடர்ந்து சில ஆண்டுகளில் ஹன்சிகா கோலிவுட்டில் தன்னுடைய இடத்தை இழந்தார்.
பின்னர் 2022ம் ஆண்டு ஜெய்ப்பூர் அரண்மனையில் சோஹல் கட்டாரியா என்ற தொழிலதிபரை பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். முதலில் கூட்டு குடும்பமாக இருந்த இந்த தம்பதி அங்கு பிரச்னை வெடிக்க பின்னர் தனி வீட்டுக்கு குடி போனதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. ஹன்சிகா தற்போது முறையாக விவகாரத்து மனுவை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து இதுவரை இரு தரப்பும் எந்த வித அதிகாரப்பூர்வ விளக்கமும் தெரிவிக்கவில்லை.
இவர்களின் காதல், திருமணம் ஆரம்பத்தில் இருந்தே மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. சோஹல் மற்றும் ஹன்சிகா இருவரும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தனர். அதில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
நடிகை நயன்தாரா தன்னுடைய திருமணத்தையும் ஹாட்ஸ்டாருக்கு விற்பனை செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் ஹன்சிகா. அதுமட்டுமல்லாமல் இதில் சோஹலுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதும், அந்த முதல் மனைவி ஹன்சிகாவின் நெருங்கிய தோழி என்பதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.