எவ்ளோ ஆஃபர் கொடுத்தாலும் நோதான்.. வந்த முதல் கமல் பட வாய்ப்பை நிராகரித்த பிரபலம்

கலைப்புலி எஸ் தாணு ஆளவந்தான் படத்தின் ஆஃபரை ஹரிஷ் ஜெயராஜிடம் கொடுக்கிறார். முதல் படமாக இது இருக்கட்டும் என்று சொல்லியே கொடுக்கிறார். ஆனால் ஹரிஷ் ஜெயராஜ் நேர்மையாக ஒரு பதிலை சொல்கிறார். அது என்னவெனில் நான் ஏற்கனவே ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறேன். அதை முடித்துவிட்டு ஆளவந்தான் படத்தை என்னுடைய இரண்டாவது படமாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என சொல்கிறார்.
ஆனால் இந்த மாதிரி வேறு யாராவது சொல்வார்களா என்பது தெரியாது. ஏனனில் ஆளவந்தான் ஒரு பெரிய பேனரில் உருவான திரைப்படம். அதிலும் கமல் படம் என ஒரு பெரிய ஆஃபர் கையில் வந்தும் அதை நிராகரித்தார் ஹரிஷ் ஜெயராஜ். இதைப்பற்றி அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதாவது முதலில் நமக்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும். நம்முடைய வெற்றி எதில் இருக்கிறது என்றால் நம்மால் இதை செய்ய முடியுமா? எவ்வளவு நாள்களாக இதை நம்மால் செய்ய முடியும் என்ற ஒரு விஷயம் இருக்கிறது .
தாணு இந்த படத்தை பற்றி என்னிடம் கேட்டபோது அது ஆளவந்தான் தான் படத்தின் பெயர் என்பது எனக்கு தெரியாது. ஆனால் தாணு கமலை வைத்து ஒரு படம் பண்ணுகிறார் என்பது மட்டும் தெரியும். அப்பொழுது எனக்கு 25 வயது. மின்னலே படத்தில் ஒரு மூன்று பாடல்களை எல்லாம் முடித்து விட்டேன். ஏற்கனவே நான் ஒரு பிசியான கீபோர்டு பிளேயராக இருந்தேன். அப்பொழுதே இது போதும். இனிமேல் வாசிக்க வேண்டாம். ரொம்ப சோர்வாக இருக்கிறது என்ற சூழ்நிலையில் தான் இருந்தேன்.
ஏனெனில் அந்த அளவுக்கு கீபோர்டு வாசிப்பதில் மிகவும் பிஸியாக இருந்த நேரம் அது. அதனால் நம்மை தேடி வரும்போது வேலை செய்து கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் இருந்தேன். அப்பொழுதுதான் மின்னலே படம் என்னை தேடி வந்தது. அதில் மியூசிக் கம்போஸ் பண்ணினேன். தாணு கமல் படத்தை பற்றி சொல்லும் போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பெரிய படம் பெரிய அளவில் தாணு முதலீடு செய்த படம் .25 கோடி பட்ஜெட் என்று சொன்னார். நான் அப்போது இந்த படத்தை இரண்டாவது படமாக எடுத்துக் கொள்கிறேன் என கூறிய அப்போது தாணு இல்லை இல்லை இதுதான் முதல் படமாக வரவேண்டும்.
ஏனெனில் மின்னலே அப்படிங்கிறது என்ன படம் என்பது தெரியாது. ஏனனில் புது ஹீரோ, புது டைரக்டர் எல்லோருமே புதுசு .ஒருவேளை அந்த படம் தப்பாக போய்விட்டால் தாணுவுக்கு ஒரு பயம் வந்துவிடும் .அந்த ஒரு பயத்தினால் மின்னலே படத்தை தள்ளிப்போடு. இதை முதலில் பண்ணு என என்னிடம் கூறினார். ஆனால் என்னை பொறுத்த வரைக்கும் என் வாழ்க்கை முழுவதும் ஒரு விஷயத்திலிருந்து பின்வாங்க மாட்டேன். அது என்னவெனில் வாக்கு.
ஒருத்தருக்கு வாக்கு கொடுத்து விட்டால் அதை கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். அதனால்தான் இந்த ஆளவந்தான் திரைப்படத்தை என்னால் பண்ண முடியவில்லை. ஆனால் என்னுடைய மூன்றாவது படத்திற்கு மறுபடியும் தாணு வந்தார். அதுதான் காக்க காக்க .அந்த படமும் எனக்கு நல்ல ஒரு ஹிட்டை கொடுத்த படம் என ஹரிஷ் ஜெயராஜ் ஒரு பேட்டியில் கூறினார்.