கேப்டன் விஜயகாந்தோட ஆசி ரொம்பவே இருக்கு... பார்த்தாலே தெரியுது... ஹரீஷ் கல்யாண்

லப்பர் பந்து படத்தில் ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவசிகா, பாலா சரவணன், காளி வெங்கட், கீதா கைலாசம், தேவதர்ஷினி, ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். விளையாட்டுடன் சமூகக் கருத்துகளையும் கலந்து அற்புதமாக எடுத்துள்ளார் இயக்குனர்.படத்தைப் பற்றி ஹீரோ ஹரிஷ் கல்யாண் இப்படி சொல்கிறார்.

கேப்டன் விஜயகாந்த் சாரோட ஆசிர்வாதம் எவ்வளவு இருக்குன்னு மக்களோட செலபரேஷன்ல தெரிய முடியுது. வழக்கமா ரிலீஸ்சுக்கு முன்னாடி பிரஸ் மீட் நடக்கும். அதுக்கு அப்புறம் தேங்க்ஸ் மீட் நடக்கும். ஆனா நாங்க ரிலீஸ்சுக்கு முன்னாடி பிரஸ் மீட் வைக்கல.

ஆன ரிலீஸ்சுக்கு அப்புறம் தேங்க்ஸ் மீட் வச்சிருக்கோம். வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி. நாங்க தியேட்டருக்குப் போய் ரசிகர்களோட ரெஸ்பான்ஸைப் பார்க்கப் போனோம். அப்போ நாங்க எல்லாம் உங்களைப் பார்த்துட்டு ரொம்ப ஹேப்பியா இருக்கோம்னு சொன்னோம்.

அதுக்கு ஒருத்தர் எழுந்திருச்சு சொன்னார். நாங்க இந்தப் படம் பார்த்துட்டு உங்களை விட டபுள் மடங்கு ஹேப்பியா இருக்கோம்னு சொன்னார். அதைத் தான் ரியல் சக்சஸா நினைக்கிறேன். அதை படத்தோட திரைக்கதை அந்த வேலையைச் செஞ்சிருக்கு.

அதனால தான் எங்களால அந்தளவுக்கு பர்பார்ம் பண்ண முடிஞ்சது. அந்த வெற்றி எங்களோட கேப்டன் தமிழுக்குத் தான் போய்ச் சேரும். எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். ரூரல் சப்ஜெக்ட்டும் பிடிக்கும். எனக்கு அந்த ரெண்டுமே கிடைச்சது.


டைரக்டர் கேப்டன் விஜயகாந்தின் வெறித்தனமான ரசிகன். எனக்கும் அவரை ரொம்ப பிடிக்கும். கேப்டன் சாரோட பிளசிங் எப்படி இருந்ததுங்கறது மக்களோட கொண்டாட்டத்தில் தெரியுது. நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனா சொல்ல முடியல.

எங்க அப்பா அடிக்கடி சொல்வாரு. எதையுமே இங்க (தலை) எடுத்துட்டுப் போகாதே. இங்க (இதயம்) எடுத்துட்டுப் போன்னு சொல்வாரு. அதனால இந்த வெற்றியை நான் இதயத்துல வச்சிக்கணும்னு ஆசைப்படறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it