நிரோஷாவுக்கு ரஜினி பட வாய்ப்பு வந்தது எப்படி? அவரே சொல்லிட்டாரே..!

by Sankaran |   ( Updated:2024-12-18 04:54:07  )
nirosha rajni
X

நடிகை ராதிகாவின் தங்கை தான் நிரோஷா. இவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் தான். கமலுடன் இணைந்து சூரசம்ஹாரம் படத்தில் அசத்தலாக நடித்து இருப்பார். ஆரம்பத்தில் பல படங்களில் நடிகர் ராம்கியுடன் இணைந்து நிரோஷா நடித்துள்ளார். இவர் காதலித்து நிரோஷாவை திருமணம் செய்து கொண்டார்.

செந்தூரப்பூவே, வெற்றிப்படிகள், மருதுபாண்டி, இணைந்த கைகள், பறவைகள் பலவிதம் ஆகிய படங்களில் ராம்கியும், நிரோஷாவும் ஜோடி சேர்ந்துள்ளனர். அந்த வகையில் இவர்கள் நடித்த படங்களில் இவர்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. அது காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராம்கி தனது மனைவி நிரோஷாவுக்கு தான் தான் ரஜினி பட வாய்ப்பையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜாதகம் என்பது வெறும் மூட நம்பிக்கை கிடையாது. அது இருக்கு. நான் நம்புறேன் என்றும் சொல்கிறார். இதுபற்றி அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க.

lal salaam

ஜாதகம் பார்ப்பது எல்லாம் சின்ன வயசில இருந்தே நான் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் எட்டாம் கிளாஸ் படிக்கும் போதே நடிகன் ஆவேன் என்று சொல்லிட்டாங்க. அப்பனா பார்த்துக்கோங்க. அந்த அளவுக்கு கரெக்டா கணிச்சவங்க எல்லாம் இருக்காங்க. சில பேர் மூட நம்பிக்கை என்று சொல்வார்கள்.

என்னை பொருத்தவரைக்கும் இருக்கு. அதை நான் இன்னும் ஃபாலோ பண்றேன். அதே மாதிரி நான் சொல்லி நிரோஷாவுக்கு லால் சலாம் படத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் வாய்ப்பும் வந்தது. இப்போது நம்பர் ஒன் சீரியலா போயிக்கிட்டு இருக்கு என்கிறார் நடிகர் ராம்கி.

ramki

ராம்கியும், அருண்பாண்டியனும் இணைந்து நடித்த இணைந்த கைகள் படம் அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. மலையேற்றமும், சாகசங்களும் மெய் சிலிர்க்க வைத்தன. அப்போதே இந்த அளவு டெக்னாலஜி இல்லாத காலகட்டத்தில் எப்படி எடுத்தார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்தளவுக்கு ராம்கி அபாரமாக ரிஸ்க் எடுத்து நடித்து இருந்தார்.

Next Story