12 வருஷமாக முடங்கிய மதகஜராஜா திரைக்கு வந்தது எப்படி? பொருளாதார சிக்கலைத் தீர்த்து வைத்தது யார்?

by Sankaran |
mathakajaraja
X

பொங்கலையொட்டி திரைக்கு வந்து சக்கை போடு போட்டு வரும் படம் மதகஜராஜா. விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், சோனுசூட் நடிப்பில் வெளியாகி உள்ள இந்தப் படத்தை சுந்தர்.சி. இயக்கியுள்ளார். படம் முழுவதும் காமெடிக்குப் பஞ்சமே இல்லாமல் கலகலப்பாக போவதால் தியேட்டருக்கு ரசிகர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்க என்ன காரணம் என்றால் இப்போது தமிழ்சினிமாவில் காமெடிக்கு பெரிய வறட்சி நிலவுகிறது.

காமெடி: சந்தானம், சூரி இருவரும் கதாநாயகனாக நடிக்கப் போய்விட்டார்கள். இருப்பது யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட ஒரு சிலர்தான். அவர்களும் பெரிய அளவில் காமெடியைக் காட்டவில்லை. அதனால் தான் காமெடி இல்லாமல் தவித்த ரசிகர்களுக்கு மதகஜராஜா பெரிய ஆறுதலாக இருந்தது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு: 12 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படம் வரவேண்டியது. ஆனால் சில பொருளாதார சிக்கல்களால் பொட்டியிலேயே முடங்கி விட்டது. அந்தப் படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 12ம் தேதி வெளியாகி பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளதால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். அதன் வெற்றிவிழாவையும் கொண்டாடி விட்டனர்.


பொருளாதார சிக்கல்: சரி. விஷயத்துக்கு வருவோம். இந்தப் படத்தின் பொருளாதார சிக்கல் என்றார்களே. அதைத் தீர்த்து வைத்தது யார்? மீண்டும் எப்படி திரைக்கு வந்தது என்ற கேள்வி எழுகிறது அல்லவா. வாங்க பார்க்கலாம். மதகஜராஜாவின் பொருளாதார சிக்கலைத் தீர்த்து வைத்தது யார்? எப்படி திரைக்கு வந்தது என்று ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

பல மாத முயற்சிகள்: மதகஜராஜாவைத் திரைக்குக் கொண்டு வர பல மாதங்கள் முயற்சிகள் நடைபெற்றன. அதைப்பற்றி நாம பேசி இருக்கிறோம். அதற்கு பெருமளவில் முயற்சி எடுத்ததுன்னா திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியமும், இயக்குனர் சுந்தர்.சி.யும்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story