Jailer 2: ரஜினிக்கு பார்ட் 2 மேலயே நம்பிக்கை இல்லை... ஜெயிலர் 2வ எப்படி சமாளிக்கப் போறாரு?
ஜெயிலர் 2 படத்தோட புரொமோ வீடியோவை பொங்கல் அன்று வெளியிட்டார்கள். இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
புரொமோவில் இருந்தே தன்னுடைய சாதனைகளை ஆரம்பிக்கணும்னு நினைச்சி பண்ணிருப்பாங்க. பிரதீப் ரங்கநாதனின் புரொமோ வீடியோ வெளியானது. ரொம்ப நல்லாருந்தது. அதே மாதிரி ரஜினி என்ற பெரிய ஆக்ஷன் ஹீரோவை வச்சிக்கிட்டு எப்படி பண்ணனுமோ அப்படி ரொம்ப அழகா பண்ணிருக்காரு.
சென்டிமென்டா நெல்சன்: அனிருத்தும், நெல்சனும் உட்கார்ந்து பேசற மாதிரி ஒரு பேட்டர்னே வச்சிருக்காங்க. இதை வந்து ஒவ்வொரு படத்துக்கும் அவரு பாலோ பண்ணிட்டு வர்றாரு. சென்டிமென்டா பண்றாரா, நல்லாருக்கணும்னு நினைச்சி பண்றாரான்னு தெரியல. ஆனா ரொம்ப நல்லாருக்கு.
இதை வந்து விட்டுறாம தொடர்ச்சியா பண்ணினா கூட நல்லதுதான். ரொம்ப வேடிக்கையா போற அவசரத்துல ஒரு வெடிகுண்டை விட்டுட்டுப் போறாரு ரஜினி. அது விழுந்ததைக் கூட கவனிக்காம போறாரு.
டூப் ரஜினி: அதே மாதிரி அந்த ஆக்ஷன் மோடு படத்துல எவ்வளவு இருக்கும்கறதை புரொமோவிலேயே சொல்லிருக்காரு. எல்லாமே சிறப்பா இருந்துச்சு. ஆனா அந்த டூப் போட்டதை மட்டும் இன்னும் கொஞ்சம் கவனமா பண்ணிருக்கலாம். ஸ்டார்ட்டிங்ல நடந்து போகும்போதே பின்னாடி அது அவரு இல்லன்னு தெரியுது.
ஜெயிலர் தொடர்ச்சிதான்: ரஜினி படத்துல ரஜினி தான நடந்து வருவாரு. இது யாருடான்னு பார்;த்தேன். கடைசில பார்த்தா ரஜினிங்கற மாதிரி காட்டுறாங்க. அதைக் கொஞ்சம் கவனமா பார்த்துருக்கலாம். ஜெயிலர் 2 முதல் பாகத்துல இருந்து தான் தொடர்றாங்க.
ஜெயிலர் படத்துல அவரு பையன் இறக்குற மாதிரி முடிச்சிட்டாங்க. அதை விட்ட இடத்துல இருந்துதான் தொடருறாங்க. எப்பவுமே அதோட தொடர்ச்சிதான் பேசப்படும். டைட்டிலை மட்டும் வச்சிக்கிட்டு வேறொரு ஹீரோவை வச்சி பண்ணினா எடுபடாது.
அவரு பையன் இல்லாம இல்லன்னா அவரு எங்கேயோ எப்படியோ தப்பிச்சி உயிரோடு வர்றாருங்கற மாதிரி கதையை மாற்றிக் கூட கொண்டு வருவாங்க என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன்.
பாலையா படம் மாதிரி: கார்லாம் பறக்குற சீனைப் பார்த்த உடனே இது ரஜினிகாந்த் படமா இல்ல பாலையா படமாங்கற மாதிரி இருக்குன்னு ஆங்கர் கேட்க, அந்தனன் சொன்ன பதில் இதுதான். ரஜினி படமே பாலையா படம் மாதிரி எல்லாம் இருந்துருக்கு. அவரே ஒரு காலத்துல குதிரையில போய் விரட்டி ஏரோபிளேனைப் போய் போஸ்ட்ல இழுத்துக் கட்டிப்போடுவாரு.
பீஸ்ட் பெய்லியர்: அதெல்லாம் ஒரு காலத்துல நடந்துருக்கு. அதனால பாலையாவுக்கும் அவருக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது. நெல்சனுக்கு டைம் கொடுத்துட்டா போதும். பீஸ்ட் பெய்லியர் ஆனதுக்குக் காரணம் என்னன்னா அவசரம் அவசரமாக படத்தை எடுக்கணும்னு சொன்னதுதான். அவருக்கும் வேறொரு படத்தை ஹிட் கொடுத்தவரை இவ்வளவுதான் டைம் இருக்குன்னு சொல்லிட்டாங்க.
ஜெயிலர்: அவரும் வேறொரு படம் போகணும்கற அவசரத்துல படத்தைப் பண்ணிட்டாரு. பீஸ்ட் பர்ஸ்ட் ஷெடுல்க்கு ஜார்ஜியாவுக்கு சூட்டிங் போனாங்க. அங்கே போய் கிரிக்கெட் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. கதையை ரெடி பண்ணாமத் தான் அங்கே போனாங்க. நல்ல வேளை அதுல பட்ட அவமானத்தை எடுத்துக்கிட்டு ஜெயிலர் படத்தை அதிரிபுதிரி ஹிட்டா கொடுத்துட்டாரு.
13 மாசம் டைம்: இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் அவசரப்படுத்தவே இல்லை. படம் முடியறதுக்கு 13 மாசம் டைம் கொடுங்கன்னு சொன்னாங்க. அவங்களும் கொடுத்துட்டாங்க. இதுவும் பான் இண்டியா படமாக நிச்சயமா வாய்ப்பு இருக்கு.
சந்திரமுகி 2: ரஜினிக்கு பார்ட் 2 மேலயே பெரிசா நம்பிக்கை இல்லை. சந்திரமுகி படத்துக்குக் கூட அதனாலதான் மறுத்தாரு. ஆனா இந்தப் படத்துக்கு என்ன சொல்லி கன்வின்ஸ் பண்ணாங்கன்னு தெரியல. இன்னொன்னு படத்தோட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கிட்ட பேசினதாலயும், நெல்சன் மேல உள்ள நம்பிக்கையாலும் ரஜினி ஓகே சொல்லிட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.