1. Home
  2. Cinema News

எனக்கு இந்த வாழ்க்கையே வேணாம்… வீட்டை அடித்து நொறுக்கிய ரஜினிகாந்த்… பதறிய மனைவி!

எனக்கு இந்த வாழ்க்கையே வேணாம்… வீட்டை அடித்து நொறுக்கிய ரஜினிகாந்த்… பதறிய மனைவி!

தமிழ் சினிமாவில் இன்று சூப்பர்ஸ்டார் பட்டத்துக்காக அடிதடி பஞ்சாயத்தே நடந்து வரும் நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய சினிமா வாழ்க்கையே வெறுத்து வீட்டையே அடித்து நொறுக்கிய சம்பவம் கூட நடந்து இருக்கிறதாம்.  வெறும் கண்டக்டராக இருந்த சிவாஜி ராவ் தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய இடத்தினை பிடித்து இருக்கிறார். வேலை செய்யும் போது அவரிடம் இருந்த ஸ்டைலை பார்த்த நண்பர்கள் திரைப்பட கல்லூரியில் சேர்த்து விட்டு இருக்கின்றனர். அங்கு முறையாக நடிப்பைக் கற்று இருக்கிறார். பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நடிப்புக்குள் எண்ட்ரி கொடுத்தார். இதையும் படிங்க:  போச்சே போச்சே.. கிரண் மட்டுமில்லை!.. கிக்கேற்றும் அந்த கில்மா நடிகையையும் கொத்தாக தூக்கிய நாகார்ஜுனா!.. தொடர்ச்சியாக வில்லனாக அறிமுகமான ரஜினிகாந்த் நாயகனாக தமிழ் சினிமாவுக்குள் தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்தார். நிறைய பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.  கண்டக்டராக சாதாரண வாழ்க்கையை வாழ்ந்த ரஜினிக்கு இந்த புகழ் முதலில் மூச்சு முட்ட செய்து இருக்கிறது. பிடித்த இடத்துக்கு செல்ல முடியாமல் மூடிய வீட்டுக்குள் சின்ன வட்டத்தினுள் குறுகிய வாழ்க்கையாகி போனதால் அது அவரை மேலும் கோபமடைய செய்து இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த கோபம் எல்லை மீற வீட்டில் இருந்த எல்லா பொருட்களையும் அடித்து நொறுக்கி இருக்கிறார். தூள் தூளாக எல்லாத்தையும் அடிக்க கத்திக்கொண்டே மூர்க்கமான ரஜினியை பார்த்த போது அவர் மனைவிக்கே அதிர்ச்சியாகி விட்டதாம். இதனால் ரஜினி யார் பேச்சை கேட்பார் என்று யோசித்த உடனே அவரின் குரு பாலசந்தரின் நினைவு வந்து இருக்கிறது. அவருக்கு கால் செய்து உடனே வீட்டுக்கு வாருங்கள் எனக் கூறி இருக்கிறார்.  இதையும் படிங்க:  3 மாசம் முண்டா பனியனோட போட்டோ வராது!.. தமிழ் ரசிகர்களுக்கு தண்ணி காட்டிய கிரண்!.. என்ன ஆச்சு தெரியுமா? என்னமோ ஏதோ என பயந்த பாலசந்தர் உடனே வீட்டுக்கு வந்து பார்த்து இருக்கிறார். அவர் ரூமே நொறுக்கப்பட்டு அலங்கோலமாக கிடந்தாலும் பாலசந்தரின் புகைப்படம் மட்டும் அசையாமல் அங்கையே மாட்டப்பட்டு இருந்தது. பாலசந்தர், ரஜினியை பார்த்து இதை மட்டும் ஏன் விட்ட எனக் கேட்டாராம். நான் எங்கையோ சிவாஜி ராவா இருந்தேன். எனக்கு ஏன் இந்த வாய்ப்பை கொடுத்து இப்படி ஒரு புகழ கொடுத்தீங்க எனக் கேட்டு இருக்கிறார். உடனே பாலசந்தர் வாய்ப்புக்காக ஒவ்வொருவரும் அலைக்கின்றனர். ஆனால் உனக்கு புகழ் தானாக தேடி வந்து இருக்கிறது. அனுபவி, இதை சரியாக பயன்படுத்து என அறிவுரை கூறி சென்றாராம்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.