கமலால்தான் அந்த படம் ஓடல.. சந்தானத்தின் திமிர் பேச்சு!. புரமோஷன் டைம்ல இது தேவையா?!..

Santhanam: என் கேரக்டரின் கமல்ஹாசன் போல எடுக்காத காரணத்தால் தான் படம் தோல்வியில் முடிந்ததாக சந்தானம் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி ரோலில் நடித்து வந்தார். அவருக்கு திடீரென வாய்ப்புகள் வர தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். பெரிய அளவில் ஹிட் இல்லை என்றாலும் அப்படங்கள் நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது.
பெரும்பாலும் பேய் படங்களில் காமெடி ரோலை எடுத்து நடிப்பதையே சந்தானம் தன்னுடைய ஸ்டைலாக வைத்து இருக்கிறார். அவரின் அடுத்த திரைப்படமான டிடி நெக்ஸ்ட் லெவல் ரிலீஸாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பேட்டிகளும் கொடுத்து வருகிறார்.
தொடர்ந்து தன்னுடைய படங்கள் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை பேசி வருகிறார். அவர் பேசும்போது, பொல்லாதவன் படத்தில் என்னை இயக்குனர் வெற்றிமாறன் நிராகரித்து விட்டார். தயாரிப்பாளர் வற்புறுத்தலால் மட்டுமே ஓகே செய்தார்.
அப்படத்தில் என்னுடைய பஞ்ச் லைன்களை நானே சேர்த்தேன். அதுபோலவே, ராஜமெளலி எனக்கு நான் ஈ படத்துக்கு வாய்ப்பு கொடுக்கும் போது எந்த டயலாக்கும் இல்லை எனவும் சொல்லி இருந்தார். நான் டப்பிங்கில் அதை மாற்றினேன். ராஜமெளலி என்னை பாராட்டி இருந்தார்.
அதுபோல, எனக்கு ஒரு படத்துக்குள் போன பின்னர் தான் அந்த படம் கண்டிப்பாக பிளாப் ஆகிவிடும் என்று தெரிந்தது. அதுதான் கார்த்தி நடிப்பில் ராஜேஷ் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா படம். அப்படத்திற்குள் போன உடனே இந்த கதை தோல்வி அடையும் என இயக்குனரிடம் சொல்லி விட்டேன்.
ஏனெனில் அந்த படத்தில் என் கேரக்டர் தான் மெயினாக இருக்கிறது. அதற்கு மேக்கப் அவ்வை சண்முகி லெவலில் செஞ்சிருக்க வேண்டும். அப்போ தான் ரசிகர்களும் நம் உழைப்பை பார்த்து படத்தின் மீது நம்பிக்கை வைப்பார்கள். அது இல்லாமல் போனதால் தான் படம் பிளாப் ஆகியது.
நான் அட்வான்ஸ் வாங்கி ஏற்கனவே படத்திற்கு கையெழுத்து போட்டு விட்டதால் அதிலிருந்து என்னால் விலக முடியவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ஏன் சார் நீங்க நடிச்ச படம் பிளாப் ஆகும் என உங்களுக்கு நடிக்கும் போது தெரியலையா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.