புது வருஷத்துக்கு சூப்பர் ட்ரீட்!.. வெளியாகிறது இட்லி கடை முக்கிய அப்டேட்!...
Idly Kadai: துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை என நடிப்பில் பல பரிமாணங்களை காட்டினார். ஒருபக்கம் கமர்ஷியல் படங்களிலும், ஒருபக்கம் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் முக்கியத்தும் உள்ள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
மசாலா படங்களில் நடித்தாலும் ஆடுகளம், வட சென்னை, அசுரன், கர்ணன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 2 முறை வாங்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் இயக்குனராகவும் மாறினார். இவர் முதலில் இயக்கிய திரைப்படம் பவர் பாண்டி.
இப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே ஒரு இயக்குனராக வெற்றி பெற்றார் தனுஷ். அதன்பின் சில வருடங்கள் கழித்து ராயன் என்கிற படத்தை இயக்கினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் தனுஷோடு காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ் என பலரும் நடித்திருந்தனர்.
இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், தனது சகோதரி மகன் பவிஷை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை முடியும் முன்னரே இட்லி கடை என்கிற படத்தை தனுஷ் துவங்கினார். இந்த படத்தில் திருவிளையாடல் படத்தில் தனுஷுடன் நடித்த நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷே இசையமைத்திருக்கிறார். இந்த படம் 2025 ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1ம் தேதியான நாளை மாலை 5 மணிக்கு இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிடவுள்ளது. எனவே, தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.