இட்லி கடை ஆடியோ லான்ச் தேதியை மாற்றிய தனுஷ்!.. பன்ச் பேசுவாரா இல்ல புலம்புவாரா?..
Idli Kadai: நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் அவ்வப்போது திரைப்படங்களை இயக்கியும் வருகிறார். ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி என்கிற படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக களம் இறங்கினார். அந்த படம் சுமாரான வெற்றியை பெற இயக்குனராக தனுஷ் வெற்றியும் பெற்றார்.
அதன்பின் சில வருடங்கள் நடிப்பதில் மட்டுமே தனுஷ் கவனம் செலுத்தி வந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் என்கிற திரைப்படத்தை இயக்கினார். தனுஷின் 50வது படமாக வெளிவந்த இப்படத்தில் தசரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது.
அதன்பின் தன் சகோதரி மகனை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றியை பெறவில்லை. தற்போது இட்லி கடை என்கிற படத்தை இயக்கி அவரே அதில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே துவங்கியது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
சமீபத்தில் இப்படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் வருகிற 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது. 13ம் தேதி என திட்டமிடப்பட்டு தற்போது அது மாற்றியமைக்கப்பட்டு 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் ‘எனக்கு எதிரா எவ்வளவு வதந்தி வேணா பரப்புங்க.. ஒவ்வொரு தடவையும் என் படம் ரிலீஸுக்கு முன்னாடி நெகட்டிவிட்டி பரப்புங்க.. ஆனா என்னை எதுவும் செய்ய முடியாது. தம்பிகளா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க.. என் ரசிகர்கள் இருக்கும் வரை ஒரு செங்கலை கூட புடுங்க முடியாது.. என் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தீப்பந்த மாதிரி எரிஞ்சுகிட்டே இருக்கிற வரைக்கும் நான் போயிட்டே இருப்பேன்’ என்றெல்லாம் ரஜினி ஸ்டைலில் பன்ச் பேசினார். அதுவும் ரஜினி பேசுவது போலவே வாயை கோணலாக வைத்து தனுஷ் பேச அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பலரும் அவரை ட்ரோல் செய்தார்கள்.
இப்போது இட்லி கடை இசை வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. இதிலும் தனுஷ் பன்ச் பேசி ட்ரோலில் சிக்கி மீம்ஸில் வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மீம்ஸ் கிரியேட்டர்கள் ஈகர்லி வெயிட்டிங்!…
