Idlikadai Audio Launch: இட்லி கடை டைட்டில் முதல் வைரல் புகைப்படத்தின் காரணம் வரை… தனுஷின் பக்கா சம்பவம்!
Idlikadai Audio Launch: தனுஷ், அருண்விஜய், ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாக இருக்கும் இட்லி கடை படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
நடிகராக தனுஷ் சாதித்ததை விட இயக்குனராக அவர் எடுத்த படங்கள் பெரிய அளவில் வெற்றியாக அமைந்தது. அந்த வகையில் பா. பாண்டி தொடங்கி கடைசியாக வெளியான ராயன் வரை தனுஷ் இயக்கத்தில் வந்த படங்கள் நல்ல வரவேற்பையே பெற்றது.
இந்நிலையில் அடுத்த படமாக இட்லி கடை ரிலீஸாக இருக்கிறது. இதன் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்த விழாவில் பேசிய தனுஷ், இந்த படத்துக்கு இட்லி கடை எனப் பெயர் வைப்பதற்கு காரணம் என்னுடைய குழந்தை பருவம் தான்.
எனக்கு சின்ன வயதில் இட்லி கடையில் இட்லி சாப்பிட ஆசை. ஆனால் அதற்கு காசு இருக்காது. பக்கத்து பூ தோட்டத்தில் இரண்டு மணி நேரம் பூ பறித்து கொடுப்பேன். அப்போ இரண்டறை ரூபாய் கொடுப்பாங்க. உடனே போய் பம்புசெட்டில் குளித்துவிட்டு ஐந்து இட்லி வாங்கி சாப்பிடுவேன்.
அந்த சுவை இன்றும் இருக்கிறது. ஆனால் இப்போ எந்த பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டாலும் அந்த சுவை கிடைப்பதே இல்லை. எனக்கு ஜிவி பிரகாஷ் மாதிரி ஒரு நண்பன் கிடைப்பது வரம். ரீல்ஸுக்காக இல்லாமல் நிலைத்து நிற்கும் படியான பாடல்களை உருவாக்க தைரியம் தேவை. அது ஜிவிக்கு இருக்கு.
நான் கொஞ்சம் சுமாரான முகம். எனக்கு நிறைய விஷயம் செட்டாகவே ஆகாது. ஹேர்ஸ்டைல், டிரெஸ் கூட சிலது மட்டும் தான் சரியாக இருக்கும். அது ரசிகர்களுக்கு செட்டாவதை மட்டுமே மறுபடி முயற்சி செய்வேன். லிங்காவை பாருங்க பங்க் ஸ்டைல் வச்சிருக்கான்.
அது போல ராயன் விழாவில் என்னுடைய படம் ஒன்று வைரலாக பரவியது. நடிகர்கள் சில நேரம் நமக்கே தெரியாமல் நடிப்பில் ஊறிவிடுவோம். சின்ன குழந்தைகள் ராயன் பாடல்களை நடித்த போது என்னுடைய கேரக்டர் பெர்பாம் செய்த நாட்களுக்கு சென்றுவிட்டேன்.
என்னுடைய ஆரம்ப காலத்துக்கு சென்றுவிட்டது. என்னுடைய நெருங்கிய வட்டாரத்துக்கு தெரியும். இருந்தும் கூச்சமாகவே இருக்கு. சினிமாவை சினிமாவா பாருங்க. படத்தை பார்த்துவிட்டு உங்க குடும்பத்தை பாருங்க. என்னுடைய ரசிகர்கள் தற்போது டாக்டர்கள், மருத்துவர்கள் என்பதை பார்க்கும் போதே ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
