போறபோக்க பாத்தா இட்லி கடை சொன்ன தேதியில ரிலீஸாகாது போலயே!.. இதுக்கு காரணம் நித்யா மேனனா?..

by Ramya |
idly kadai
X

Idly Kadai: தமிழ் சினிமாவில் தற்போது படு பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். தொடர்ந்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷ் அடுத்தடுத்து புதுப்புது திரைப்படங்களை இயக்கி வருகின்றார். ராயன் திரைப்படத்தை இயக்கி முடித்த கையோடு இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.


இந்த திரைப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்கின்றார். மேலும் இந்த படத்தை இயக்குவதோடு மட்டுமில்லாமல் தானே தயாரிக்கவும் செய்திருக்கின்றார். இதனை தொடர்ந்து தவான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று கூறப்பட்டு வருகின்றது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கின்றார் இயக்குனர் தனுஷ். மேலும் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், ராஜ்கிரண், அருண் விஜய் உள்ளிட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் இதுவரை செய்யாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சமீபத்திய பேட்டிகளில் கூறியிருந்தார்.

இவரின் நடிப்பில் கடந்தது பொங்கல் பண்டிகைக்கு வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. அந்த திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நித்யா மேனன் இட்லி கடை திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து மிகவும் பெருமையாக பேசி இருந்தார்.


அந்த கதாபாத்திரம் இதுவரை நான் செய்யாத கதாபாத்திரம். நிச்சயம் உங்களை அழ வைக்கும் என்று கூறியிருந்தார். இதனால் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியிருக்கின்றது. அதாவது இப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகுவது சற்று சந்தேகம் தான் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.

ஏனென்றால் நித்யா மேனனின் காட்சிகள் இன்னும் முழுமையாக எடுக்கப்படவில்லை என்றும், அதற்கு சற்று காலதாமதம் ஆகும் என்பதால் படத்தை சொன்ன தேதியில் வெளியிடுவது கொஞ்சம் கஷ்டம் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. அதே ஏப்ரல் 10ம் தேதி தான் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாக இருப்பதால் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தள்ளி போவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று கூறி வருகிறார்கள். என்ன நடக்கின்றது என்பதை இனி நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story