இளையராஜாவை சந்தித்த லப்பர் பந்து குழுவினர்... படம் முழுக்க அவரு தானே!
சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் லப்பர் பந்து. விiயாட்டுடன் சமூகக் கருத்துகளையும் கலந்து அற்புதமாக இயக்கியுள்ளார் தமிழரசன் பச்சைமுத்து. இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவசிகா, பாலா சரவணன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் தமிழரசனும் விஜயகாந்தின் தீவிர ரசிகர் என்பதால் படத்தில் கதாநாயகன் அட்டகத்தி தினேஷை படத்தில் விஜயகாந்தின் ரசிகராகக் காட்டியிருப்பார். விஜயகாந்த் வால்போஸ்டர், பாடல்கள், ஸ்டிக்கர் என படம் முழுவதும் மாஸ் காட்டியிருப்பார். இதனால் கோட் படத்தை விட இந்தப் படத்தில் தான் விஜயகாந்துக்கு நல்ல ஒரு டிரிபியூட்னு படம் பார்த்த எல்லாருமே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.
இந்நிலையில் விஜயகாந்துக்கு பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இளையராஜா. நீ பொட்டு வச்ச தங்கக்குடம் ஊருக்கு நீ மகுடம் என்ற விஜயகாந்த் பாடல் படத்தில் பட்டையைக் கிளப்பும். இந்தப் பாடல் இடம்பெற்ற படம் பொன்மனச்செல்வன். 1989ல் பி.வாசு இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா.
அந்த வகையில் இளையராஜாவை சந்தித்துள்ளனர் லப்பர் பந்து படக்குழுவினர். அவர்கள் இளையராஜாவுடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டு ஆசியும் பெற்றுள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. படத்தை எஸ்.லட்சுமணனும், ஏ.வெங்கடேஷூம் தயாரித்துள்ளனர்.நீ பொட்டு வச்ச தங்கக் குடம்... ஊருக்கு நீ மகுடம்..!
10 நாள்களில் லப்பர் பந்து படம் 18 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. குடும்ப்படமாகவும், விளையாட்டை மையமாகவும் கொண்ட சமூகக் கருத்துகளைத் தாங்கி வந்துள்ளதால் இந்தப் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்தப் படத்தை ஏற்கனவே இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களான ரவிச்சந்திரன், அஸ்வின், ஹர்பஜன்சிங் ஆகியோரும் பாராட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற தரமான கதை அம்சம் கொண்ட படங்கள் வரும் பட்சத்தில் தமிழ் ரசிகர்கள் கதாநாயகர்கள், இயக்குனர்கள் என்பதை எல்லாம் பார்க்க மாட்டார்கள். படத்தை உச்சி முகர்ந்து வரவேற்பார்கள் என்பது நிச்சயம்.