மாமா மருக்கயா.. ‘டியூட்’ படத்திற்கும் ஆப்பு வைக்கு காத்திருக்கும் இளையராஜா

ஒரு பக்கம் இளையராஜா தன் அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை பயன்படுத்தும் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் மீது வழக்கு போட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனாலும் இந்த தலைமுறை இசையமைப்பாளர்கள் அதை கண்டுகொள்வதாக தெரிவதில்லை. காப்பி ரைட்ஸ் என்ற பெயரில் இளையராஜா வழக்கு போடுவது ஒரு சில பேருக்கு கடுப்பை ஏற்படுத்தினாலும் தன் குழந்தையை அடுத்தவன் சொந்தம் கொண்டாடுவதை பார்க்கும் போது யாருக்குத்தான் கோவம் வராமல் இருக்கும்.
அப்படிப்பட்ட மனநிலையில்தான் இளையராஜா இப்போது இருக்கிறார். தன் பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்று அவர் சொல்லவில்லை. பயன்படுத்துவதற்கு முன் அவரின் அனுமதியை பெறவேண்டும் என்றுதான் சொல்கிறார். இது தெரியாமல் வெளியில் ‘பணத்தாசை புடித்த இளையராஜா’ என அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதற்கு இளையராஜா தரப்பில் வழக்கு போட்டனர்.
அந்த வழக்குதான் இப்போது நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. அதனால் தற்காலிகமாக குட் பேட் அக்லி படத்தில் அவருடைய பாடல்களை நீக்கியிருக்கின்றனர். ஓடிடியில் குட் பேட் அக்லி படத்தை பார்த்தால் அந்த பாடல்கள் இல்லை என்பது தெரியும். ஆனால் உண்மையில் இளையராஜாவுக்கும் சோனி மியூஸிக்கும்தான் பிரச்சினையாம். இளையராஜாவின் பாடல்களின் உரிமையை சோனி மியூஸிக்தான் வைத்திருக்கிறார்கள்.
அதனால்தான் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த பட நிறுவனங்கள் நேரிடையாக சோனி மீயூஸிக்கிடம் முன் அனுமதி வாங்கிவிடுகின்றனர். ஆனால் சோனி மியூஸிக்கும் இளையராஜாவுக்கும் பிரச்சினை இருப்பதால் இளையராஜா தரப்பில் இருந்து தன் பாடல்களை தன் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என வாதாடி வருகின்றனர். இந்த நிலையில் இது சம்பந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
டியூட் படத்தில் தன்னுடைய இரண்டு பாடல்களை பயன்படுத்தி உள்ளனர் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் வாதம் செய்தனர். அப்போது நீதிபதி செந்தில்குமார் ‘அது சம்பந்தமாக தனியாக வழக்கு தொடரலாம்’என்று தெரிவித்திருக்கிறார்.