மியூசிக்னா என்னன்னே தெரியாதவனுக்கு அவ்வளவு சம்பளமா?.. இளையராஜா கோபப்பட்ட மொமெண்ட்!..

by ROHINI |
Ilaiayaraja
X
Ilaiayaraja

Ilaiyaraja:தமிழ் திரையுலகில் தன்னுடைய இசையால் அனைவரையும் கட்டி போட்டு வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த திரையுலகில் தன்னுடைய இசையை வைத்து மட்டுமே தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டு வருகிறார். அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா தொடர்ந்து 80கள் 90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி இசை அமைப்பாளராக மாறினார்.

அதுவும் 80கள் காலகட்டம் அவருக்கு ஒரு மிகப்பெரிய சகாப்தமாக அமைந்தது. அந்த அளவுக்கு ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இளையராஜா தான் இசை. இசையமைப்பாளர்களில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை ஒரே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தன்னுடைய சம்பளத்தை ஏற்றி கேட்டிருக்கிறார்.

அதற்கு பல தயாரிப்பாளர்கள் ஏன் இவ்வளவு சம்பளம் உயர்த்தி விட்டீர்கள் என கேட்டதற்கு இசை என்றால் என்ன என்பதே தெரியாத ஒருத்தன் அவ்வளவு சம்பளம் வாங்கும் போது நான் வாங்கினால் என்ன என்று சொல்லி அதன் பிறகு தான் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தினாராம் இளையராஜா. அவர் வேறு யாரும் இல்லை டி ராஜேந்திரன். கமல் ரஜினி ஒரு முன்னணி நடிகர்களாக இருந்த போது அந்த சமயத்தில் இளையராஜா தான் மிகவும் பீக்கில் இருந்த ஒரு இசையமைப்பாளர்.

அது மட்டுமல்ல பாலச்சந்தர் மகேந்திரன் எஸ் பி முத்துராமன் இவர்கள் தான் அப்போதைய காலகட்டத்தில் ஒரு முன்னணி இயக்குனர்களாக இருந்தவர்கள் .இப்படி ஒட்டுமொத்த எல்லா துறைகளிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் தான் டி ராஜேந்திரன். ரஜினி கமல் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது டி ராஜேந்திரன் நடித்த படங்களும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்.

tr

இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒரு பக்கம் ஹிட்டாகி கொண்டிருக்கும் பொழுது இவருடைய பாடல்களுக்கும் ரசிகர்கள் பெரும் வரவேற்பை கொடுக்க தொடங்கினார்கள். எஸ்.பி. முத்துராமன் மகேந்திரன் இவர்களுடைய இயக்கத்தில் படங்கள் நல்ல வரவேற்பை பெரும்பொழுது டி ராஜேந்திரனும் அவர்களுக்கு இணையாக படங்களை இயக்கி அதிலும் தன்னுடைய திறமையை பதித்தார்.

இப்படி ஒரு பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் தான் டி ராஜேந்திரன். அவருடைய இந்த ஒட்டுமொத்த பெருமை, புகழுக்கு பிறகுதான் அவருடைய சம்பளம் படிப்படியாக உயரத் தொடங்கியது .இதன் காரணமாகவே தான் இளையராஜாவும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்திக் கொண்டார் என வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story