பார்க்க வந்த பிரபலம்!.. விரட்டியடித்த இளையராஜா!.. பி.வாசு சொன்ன அந்த சம்பவம்!...

by Rohini |   ( Updated:2025-03-14 11:36:29  )
ilaiyaraja vaasu
X

சின்னத்தம்பி, வால்டர் வெற்றிவேல், உழைப்பாளி போன்ற கமெர்ஷியல் படங்களை கொடுத்து கமெர்ஷியல் இயக்குனர் என்ற பேர் எடுத்தவர் பி. வாசு. இவரது இயக்கத்தில் ஏகப்பட்ட வெற்றிப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. சந்திரமுகி படம் பக்கா ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படம் தான். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் இவருக்கு என தனி ஃபேன்ஸ் பாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள்.

இன்று அனைவரும் பார்த்து மிரளும் தெலுங்கு நடிகரான பாலையா என்ற பாலகிருஷ்ணனை சினிமாவில் அறிமுகம் செய்தவரும் வாசுதான். இந்த நிலையில் தனக்கும் இளையராஜாவுக்கும் இருக்கும் நட்பு பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் வாசு. இளையராஜாவை பற்றி பெருசா பேசி பேசி இப்ப உள்ள இயக்குனர்களிடம் பயத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் இளையராஜா அப்படிப்பட்டவர் கிடையாது என வாசு கூறியிருக்கிறார்.

வாசுவின் பல படங்களை பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பாராம். டியூன் போட படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தாலும் அதிலுள்ள காமெடியை நினைத்து நினைத்து பார்த்து சிரிப்பாராம் இளையராஜா. ஒரு நல்ல காமெடியான நபர் இளையராஜா என வாசு கூறினார். ஆனால் அவரிடம் இருக்கும் ஒரு கொள்கை என்னவெனில் அவரை பார்ப்பதற்கு முன் அவரிடம் அனுமதி வாங்கிவிட்டு போக வேண்டும்.

இல்லையென்றால் தன் வீட்டிற்கு தேடி வந்தாலும் அது பெரிய ஆளாக இருந்தாலும் பார்க்கமாட்டார் இளையாராஜா. ஒருவேளை இதுகூட அவரை பற்றி வெளியில் தப்பா பேசுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என வாசு கூறினார். ஒரு முறை வாசுவும் இளையராஜாவும் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பெரிய பிரபலம் இளையராஜாவை பார்க்க வீட்டிற்கே வந்தாராம்.

அந்த பிரபலம் வந்ததை இளையராஜாவின் உதவியாளர் வந்து சொல்ல ‘ நான் வர சொன்னேனா? பார்க்க முடியாது’ என சொல்லி அனுப்பிவிட்டாராம் இளையராஜா. உடனே வாசு ‘என்னண்ணே வீடு வரைக்கும் வந்துட்டார். பார்க்கலாமே’ என்று சொல்ல அதற்கு இளையராஜா ‘இது என்னுடைய டைம். உன்னுடைய டைம். இதற்கிடையில் யாரையும் பார்க்க அனுமதிக்க மாட்டேன்’ என்று சொன்னாராம்.


இதே மாதிரிதான் பாலையாவும் என வாசு கூறினார். மேலும் இதில் என்ன தவறு இருக்கிறது. அவர் சொல்வதும் சரிதானே? ஒருத்தரை பார்க்க போகிறோம் என்றால் அனுமதி வாங்க வேண்டும். அத விட்டு நான் வந்திருக்கிறேன். நீ வந்து பாருனு சொன்னால் நன்றாகவா இருக்கும் என வாசு கூறினார்.

Next Story