இளையராஜாவின் லண்டன் சிம்பொனியில் நடிகர், நடிகைகள் மிஸ்ஸிங்... இதான் காரணமா?

by Sankaran |
ilaiyaraja sympony
X

சமீபத்தில் இளையராஜா லண்டன் சென்று சிம்பொனி இசையை அரங்கேற்றினார். இது உலகம் முழுவதும் ஒரு இந்தியனை அதிலும் குறிப்பாகத் தமிழனை பெருமை கொள்ளச் செய்தது. இது இளையராஜாவின் வாழ்க்கையில் ஒரு மைல் கல்.

அந்த சாதனையைப் படைத்த போது இங்கிருந்து தமிழ் நடிகர்கள், நடிகைகள் யாருமே போகவில்லை. அது ஏன்னு பலருக்கும் சந்தேகம் வந்து இருக்கலாம். இதைப் போக்கும் வகையில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அவரது யூடியூப் சேனல் ஒன்றில் பதில் தருகிறார்.

இசை அமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு சென்னை, நாமக்கல் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து ரசிகர்களும், பாலிவுட் இயக்குனர் பால்கி உள்பட எல்லாரும் கலந்துருக்காங்க.

கலந்து கொள்ளவில்லை: ஆனா 1000 படங்களுக்கு மேல இசை அமைச்சிருக்கிற இசை அமைப்பாளரைக் கொண்டாடுற விதமா நம்மோட தமிழ் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் யாருமே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையே. இதற்கு என்ன காரணம்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்.

எவ்வளவு செலவாகும்?: லண்டனில் நடைபெற்ற சிம்பொனி இசையைப் பார்ப்பதற்காக தமிழ் சினிமா உலகினர் பலர் போகாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக சொல்லணும்னா நிகழ்ச்சி நடந்தது லண்டன். அவ்வளவு தூரம் போய் வர எவ்வளவு செலவாகும்னு தெரியும். அந்தளவு வசதி இல்லாமல் கூட பல பேரு இருக்கலாம்.


அழைப்பு: சில பேருக்கு அழைப்பு இல்லாம கூட இருந்து இருக்கலாம். பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அதனால அதைப் பற்றிப் பொத்தாம்பொதுவாக சொல்வது சரியாக இருக்காது அப்படின்னுதான் நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இவர் மேலும் இளையராஜாவைப் பற்றி கூறுகையில் ரஜினிக்கு பொன்விழா ஆண்டு எடுத்து திரையுலகினர் கொண்டாடுவதை ஏற்காமல் இருக்கலாம்.

பொன்விழா: ஆனால் இளையராஜா அப்படி அல்ல. அவருக்கு திரையுலகினர் அரசின் ஏற்பாடுடன் பொன்விழாவையும், சிம்பொனியில் சாதித்ததையும் சேர்த்து கொண்டாடினால் நிச்சயம் ஏற்றுக் கொள்வார். அப்படி செய்தால் நல்லாருக்கும்னும் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Next Story