எந்த நடிகனையும் பாராட்டாத இளையராஜாவா இப்படி?!.. சமீபத்தில் செய்த தரமான சம்பவம்!..

இளையராஜாவின் உலகமே அவரின் இசைதான். ஒரு நாளின் 24 மணி நேரமும் அவர் சிந்தனை அதில் மட்டுமே இருக்கிறது. இசையை சுவாசித்து, இசையை உண்டு, இசையை உருவாக்கி வாழ்ந்து வருகிறார் அவர். ஒரு பாடலுக்கான இசையை அவர் எப்படி தேர்ந்தெடுக்கிறார் என்பது பல இசையமைப்பாளர்களுக்கே இப்போது வரை புரியவில்லை.

ஒருபக்கம் சினிமா இசை, ஒரு பக்கம் ரசிகர்களை மகிழ்விக்க இசை நிகழ்ச்சிகள், ஒருபக்கம் வெளிநாடுகளுக்கு போய் சிம்பொனி என கலக்கி வருகிறார். 81 வயதிலும் இன்னும் சுறுசுறுப்பாக இசையில் இயங்கி வருகிறார். 80களில் தமிழ் சினிமாவை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக இருந்தவர் இளையராஜா.

இவரின் இசையை நம்பியே அப்போது பெரும்பாலான படங்கள் உருவானது. அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன், ராமராஜன் என பலரும் தங்களின் படங்களில் இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

திரைப்பட பாடல்களை பொறுத்தவரை இயக்குனர் வந்து கதையை சொல்லி பாடல்களை கேட்பார். இளையராஜாவும் 5 பாடல்களை போட்டு கொடுத்துவிடுவார். அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும், இளையராஜாவுக்கும் இடையேயான உறவு என்பது அவர் படத்திற்கு இசையமைப்பதோடு சரி.

மரியாதை நிமித்தமாக அந்த ஹீரோ சந்தித்தால் சில வார்த்தைகளை பேசிவிட்டு அனுப்பிவிடுவார். அதோடு சரி. மற்றபடி ஒரு படத்தை பார்த்துவிட்டு அந்த நடிகரை நேரில் அழைத்து இளையராஜா பாராட்டி பேசியதே கிடையாது. ஆனால், சமீபத்தில் ஜமா படத்தில் நடித்த சேத்தனை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார் இளையராஜா.


பேட்டி ஒன்றில் இதுபற்றி பேசிய சேத்தன் ‘ஒருநாள் இளையராஜா என்னை பார்க்க விரும்புவதாக சொன்னார்கள். நான், என் மனைவி, மகள் என 3 பேரும் போய் விட்டோம். ஜமா படத்தில் என் நடிப்பை பாராட்டி பேசினார். அவருக்கு வேலை இருந்தபோதும் 2 மணி நேரங்கள் பேசினார். என்னை பற்றி விசாரித்துவிட்டு அவரின் சின்ன வயது பற்றியெல்லாம் பேசினார். மனதுக்கு நிறைவாக இருந்தது’ என நெகிழ்கிறார் சேத்தன்.

Related Articles
Next Story
Share it