Dude: டியூட் படத்துக்கு ஆப்பு !.. விரைவில் வழக்கு!.. வேலையை ஆரம்பிச்ச இளையராஜா!...

தமிழ் சினிமாவில் பலருக்கும் பிடித்த இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. 80,90களில் இவர் இசையமைத்த பல நூறு பாடல்கள் 70,80 கிட்ஸ்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கிறது. அவர்களின் கார் பயணங்களில் இளையராஜாவின் பாடல்கள்தான் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்போது பல இசையமைப்பாளர்கள் வந்துவிட்டாலும் இளையராஜா போல இனிமையான பாடல்களை அவர்கள் கொடுப்பதில்லை என்பதை அவர்களின் எண்ணமாக இருக்கிறது.
முன்பு போல இளையராஜா அதிக படங்களுக்கு இசையமைப்பது இல்லை. அதேநேரம் இசைக்கச்சேரி நடத்துவது, சிம்பொனி இசையமைப்பது, தன்னை தேடி வரும் படங்களுக்கு இசையமைத்து கொடுப்பது என தொடர்ந்து தன்னை பிசியாகவே வைத்திருக்கிறார்.
ஒருபக்கம் தன்னுடைய பாடல்களை இப்போது சில படங்களில் இயக்குனர்கள் பயன்படுத்துவதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தன்னிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பது அவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், இளையராஜாவின் பாடல்களின் உரிமையை வைத்திருக்கும் ஆடியோ நிறுவனங்களிடம் தயாரிப்பாளர்கள் என்.ஓ.சி வாங்கி விடுகிறார்கள். ஆனால் இளையராஜாவோ விடாமல் வழக்கு தொடர்ந்து வருகிறார்.
ஏற்கனவே பலமுறை இது போன்ற பல படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேக் அக்லி படத்தில் தனது 3 பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தார். இளையராஜா. அதன் காரணமாக அந்த படம் ஓடிடியிலிருந்து தூக்கப்பட்டது. இதனால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது.
தற்போது பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்துக்கு எதிராகவும் இளையராஜா வழக்கு தொடரவிருக்கிறார். டியூட் படத்தில் இளையராஜா இசையமைத்த ‘கருத்த மச்சான்’ பாடலை என ஒரு காட்சியில் பயன்படுத்தியுள்ளனர். மேலும் ஒரு பாடல் என, இளையராஜாவின் இரண்டு பாடல்கள் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அனுமதியின்றி தனது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்துவதாக சோனி மியூசிக், எக்கோ ரெக்கார்டிங், ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்தார். அப்போது டியூட் படம் பற்றியும் புகார் சொல்லப்பட்டது.
அதற்கு நீதிபதி டியூட் படத்துக்கு தனியாக நீங்கள் வழக்கு தொடலாம் என அனுமதி அளித்திருக்கிறது. எனவே இளையராஜா ஒரு தனி வழக்கு தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.