கோயிலிலிருந்து வெளியே அனுப்பப்பட்ட இளையராஜா.. இசைஞானிக்கு இப்படி ஒரு நிலைமையா?..

by Ramya |   ( Updated:2024-12-16 05:33:42  )
ilayaraja
X

ilayaraja 

இசைஞானி இளையராஜா: உலகம் எங்கும் இருக்கும் தமிழர்களால் இசைஞானி என்று அன்போடு அழைக்கப்படுபவர் இளையராஜா. தற்போது வரை 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர் இன்றளவும் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். இவரது பாடல்கள் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை உள்ள அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கும் வகையில் இருக்கின்றது.

இவரின் இசையமைப்பில் கடைசியாக ஜமா என்கின்ற திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்திற்கும் இசையமைத்து இருக்கின்றார். இப்படத்திலிருந்து வெளியான 'தினம் தினமும்' என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

மேலும் விடுதலை 2 திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விடுதலை திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் விடுதலை 2 திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. தொடர்ந்து சினிமாவில் படங்களுக்கு இசையமைத்து வரும் இசைஞானி இளையராஜா இந்த வயதிலும் இசையை தொடர்ந்து கற்று வருகின்றார். 2025 மார்ச் மாதம் 28ம் தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது

சமீப காலமாக அவர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. அவர் அதிக அளவு தலைக்கணத்துடன் நடந்து கொள்கின்றார். அவர் பாடல்களை யாராவது பயன்படுத்தினால் உடனே காப்பிரைட்ஸ் கேட்டு வழக்கு தொடர்ந்து விடுகின்றார்.

மேலும் தன்னிடம் பாடும் பாடகர்களை மேடையில் வைத்து அசிங்கப்படுத்துகின்றார் என்று பல விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது. இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தனது வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றார் இசைஞானி இளையராஜா. 81 வயதாகும் இளையராஜா இன்றும் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.


இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருக்கின்றார். அப்போது கருவறைக்குள் அர்த்தமண்டபத்தில் இளையராஜா உள்ளே நுழைந்து சாமி தரிசனம் செய்ய சென்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கிருந்த அந்தணர்களால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கோவில் கருவறைக்கு வெளியே நின்று அவரை சாமி தரிசனம் செய்யும் படி அறிவுறுத்தப்பட்டது. இதனால் கருவறைக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்து கோவில் மரியாதைகளை ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கருவறைக்குள் அனுமதிக்ப்படாதது ஏன்? என்றும் இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை இணையதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story