இளையராஜா பயோபிக்கில் திடீர் ட்விஸ்ட்.. ஓவர் பில்டப் கொடுத்தா இப்படித்தான்?..

by Ramya |
ilayaraja
X

ilayaraja 

நடிகர் தனுஷ்:

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான நடிகராக இருந்து வருகின்றார் தனுஷ். அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். மற்ற இயக்குனர்களின் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தனது இயக்கத்திலும் முழு கவனம் செலுத்தி வருகின்றார். இவர் தன்னுடைய 50-வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார்.

இயக்குனர் தனுஷ்:

இப்படத்தின் வெற்றியால் தொடர்ந்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார் நடிகர் தனுஷ். அதன்படி அடுத்ததாக நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டார். முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு இருக்கின்றது.


இப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்கின்றார் இயக்குனர் தனுஷ். அடுத்ததாக இட்லி கடை என்கின்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து இயக்கியும் வருகின்றார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

மற்ற இயக்குனர்களின் படங்கள்:

தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் முழுவதும் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது இல்லாமல் கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார் நடிகர் தனுஷ்.

அடுத்ததாக அமரன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டிருந்தது. மேலும் ஹிந்தியிலும் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் தனுஷ் கமிட்டாகி இருக்கின்றார்.

அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்திய இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் நடிகர் தனுஷ் கமிட்டான திரைப்படம் தான் இளையராஜாவின் பயோபிக்.

இளையராஜாவின் பயோபிக்:

இசைஞானி இளையராஜா அவர்களின் பயோபிக்கில் நடிகர் தனுஷ் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். இந்த திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கின்றார். இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி போஸ்டர்களும் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. நிச்சயம் இந்த திரைப்படம் எடுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தார்கள்.

மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தொடர்ந்து இளையராஜா அவர்களிடம் அவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் குறித்து கேட்டு தெரிந்து வருவதாகவும், இளையராஜாவும் தனக்கு ஞாபகம் வரும்போதெல்லாம் தன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து இயக்குனரிடம் பகிர்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.


ஆனால் படம் டேக்காப் ஆகாமல் இருந்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷும் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்த வருவதால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவரின் கால்ஷீட் கிடைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம் தான். இதனால் இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டது என்று சமூக வலைதள பக்கங்களில் கூறி வருகிறார்கள்.

Next Story