Bison: ‘பைசன்’ படத்துக்கு இப்படி ஒரு எதிர்ப்பா? துருவ் விக்ரம் நம்பிக்கை வீண் போயிடுமா?
Bison:
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அடுத்து வரப் போகும் திரைப்படம் பைசன். துருவ் விக்ரம் நடிப்பில் இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன. படத்தின் போஸ்டர் வெளியானதுமே ஏதோ ஒரு ஆழமான கதையை உள்ளடக்கிய திரைப்படமாகத்தான் இது இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். கடைசியில் இந்தப் படம் கபடி விளையாட்டை மையப்படுத்தியும் ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்க்கைப் போராட்டத்தையும் விளக்கும் படமாகத்தான் தயாராகியிருக்கின்றன.
சமூக பிரச்சினையை கூறும் மாரி;
தென் மாவட்டத்தில் உள்ள கிராம வாழ்க்கை முறையையும், கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை பற்றிய படமாகவும் இது உருவாகியிருக்கின்றன. பொதுவாக மாரிசெல்வராஜ் படங்கள் என்றாலே பிற்படுத்தப்பட்ட மக்கள், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள், அவர்கள் படும் வேதனை, அவமானங்கள் என தொடர்ந்து தன் படங்களின் மூலம் காட்டி வருகிறார்.
சாதிய பிரச்சினையை பற்றியே அதிகமாக பேசி வருகிறார் மாரிசெல்வராஜ். இது பார்க்கும் பார்வையாளர்களில் சில பேருக்கு ஏற்புடையதாகவும் சில பேருக்கு சலிப்பை உண்டாக்குவதாகவும் இருக்கின்றன. இவர் மட்டுமில்ல, பா. ரஞ்சித் படங்களும் இதே வரிசையில்தான் அடங்கும். சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் சாதிய பிரச்சினையை அதிகம் பேசும் இயக்குனர்களாக மாரிசெல்வராஜ் மற்றும் பா. ரஞ்சித் இவர்கள் பேர்தான் அடிபடும்.
பைசன் படத்துக்கும் இதே நிலைமைதானா?
ஏன் ‘வாழை’படம் பலராலும் பாராட்டப்பட்டாலும் சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் மாரிசெல்வராஜின் படங்கள் பற்றி பரவலாக விவாதிக்கபடும். முக்கியமாக சமூக பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் விதமாகத்தான் இவருடைய படங்கள் இருந்திருக்கின்றன.
இந்த வரிசையில் பைசன் திரைப்படம் கபடி விளையாட்டையும் தாண்டி மாரிசெல்வராஜின் வழக்கமான சமூக பிரச்சினையை பேசும் படமாக இருக்குமா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும். நேற்று இந்தப் படத்திற்கான ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடந்தது. இந்த விழாவிற்கு துருவ் விக்ரம் , அனுபமா என படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்.
நெப்போ கிட்:
அப்போது துருவ் விக்ரம் பேசுகையில் ‘ நான் இரண்டு படங்களில் நடித்தாலும் இதுதான் என்னுடைய முதல் படம். அப்படித்தான் நான் பார்க்கிறேன். இதற்கு முந்தைய படங்களை நீங்கள் பார்க்காவிட்டாலும் இந்தப் படத்தை கண்டிப்பாக போய் தியேட்டரில் பாருங்கள். இந்தப் படத்திற்காக 100 சதவீத உழைப்பை நான் போட்டிருக்கிறேன்.’என கூறினார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அதாவது ‘கண்டிப்பாக பார்க்க மாட்டோம். நசுக்கிட்டாங்க, பிதுக்கிட்டாங்கனுதான் மாரிசெல்வராஜ் எப்படியும் படத்தில் பேசியிருப்பார். உங்க அப்பா படத்தையே நாங்க பார்க்க மாட்டோம். நெப்போ கிட் வேற.. ’என்று அடுத்தடுத்து கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
