அவர் நடிக்க வேண்டிய படமே இல்ல.. அசால்ட்டா தூக்கி சாப்பிட்ட தனுஷ்.. ஃபர்ஸ்ட் சாய்ஸ் யார் தெரியுமா?

இயக்குனராகவும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகத்திறமைகள் கொண்ட கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்தப் படத்தை தனுஷே இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். ஆரம்பத்தில் இந்த படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தாலும் பாக்ஸ் ஆஃபிஸில் சொதப்பியது.
இந்தப் படத்திற்காக தனுஷ் அவரது சொந்த ஊருக்கு சென்று குல தெய்வ வழிபாட்டை எல்லாம் மேற்கொண்டார். விவாகரத்துக்கு பிறகு அவரது தொழில் , பேஷன் இவைகளில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இன்னொரு பக்கம் தாய் தந்தை மகன்கள் இவர்கள் மீதும் அக்கறையுடன் இருந்து வருகிறார். அவரது அடுத்த படமான டி54 அடுத்த வருடம் 2026ல் ரிலீஸாக இருக்கிறது.
அந்தப் படத்தை விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கிறார். ஐசரி கணேஷ்தான் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். அதுமட்டுமில்லாம ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் எல் ராய் அந்தப் படத்தை இயக்குகிறார். இப்படி அடுத்தடுத்து லைன் அப்பில் பிஸியாக இருக்கும் தனுஷ் கதைகளை தேர்ந்தெடுப்பதிலும் ஆகச்சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார்.
அசுரன் கர்ணன் திரைப்படங்களுக்கு பிறகே அவரது நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து அனுபவம் வாய்ந்த நடிகரை போல நடிப்பிலும் சரி கதையை தேர்ந்தெடுப்பதிலும் சரி கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ் . இந்த நிலையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்திருந்தார் தனுஷ். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெங்கி அட்லூரி பேசும் போது வாத்தி படத்தின் ஸ்கிரிப்ட் முதலில் ரவிதேஜாவிடம்தான் சொன்னாராம்.
அந்த நேரத்தி ரவி தேஜா மிகவும் பிஸியாக இருந்தாராம். அதன் பிறகுதான் தனுஷ் நடித்தாராம். தனுஷ் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டத்தும் ‘அவர் ஒரு சிறந்த நடிகர்’ என்று ரவி தேஜா கூறியிருக்கிறார். வாத்தி படத்தை பார்த்த பிறகு தனுஷை தவிற வேறு எந்த நடிகர் நடித்தாலும் படம் நன்றாக வந்திருக்குமா என சொல்ல முடியாது என்றும் ரவி தேஜா கூறியிருக்கிறார். அடுத்து சூர்யாவை வைத்து வெங்கி அட்லூரி ஒரு படத்தை எடுத்து வருகிறார்.