அஜித் இப்படித்தான் உடம்ப குறைச்சாரா?.. இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு!..
Actor Ajith: தமிழ் சினிமாவில் தனக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். சினிமாவில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் அஜித் தற்போது கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கின்றார். சினிமா மீது எவ்வளவு காதல் இருக்கின்றதோ அதே அளவுக்கு பைக் மற்றும் கார் பந்தயங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கேப் கிடைக்கும் நேரங்களில் பைக் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு ட்ரிப் சென்று விடுவார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் சினிமாவில் நடிக்க தொடங்கியதற்கு பிறகு ஒரு விபத்தில் சிக்கியதை தொடர்ந்து கார் பந்தயங்களில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார்.
மீண்டும் தற்போது ஐரோப்பாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு தன்னை தயார்படுத்தி வருகின்றார். அதற்கு முன்னதாக வரும் 11 மற்றும் 12 தேதிகளில் துபாயில் நடக்கும் கார் ரேஸில் கலந்து கொள்ள இருக்கின்றார். சமீபத்தில் துபாய் சென்று அங்கு பயிற்சி பெற்று வருகின்றார். இதற்காகவே தான் நடித்து வந்த படங்களை முழுவதுமாக முடித்துவிட்டு சென்றிருக்கின்றார்.
துணிவு திரைப்படத்திற்குப் பிறகு அஜித் கமிட்டான விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய இழுபறியாக இருந்து வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் தான் முடிவுக்கு வந்தது. இடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் நடிப்பதற்கு கமிட்டாகி அப்படத்தின் படப்பிடிப்பையும் முழுவதுமாக முடித்து விட்டார்.
இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு துபாய் சென்றிருக்கின்றார். இந்த இரண்டு திரைப்படங்களுமே வெளியீட்டிருக்கு ரெடியாக இருக்கின்றது. குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் பத்தாம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது. விடாமுயற்சி திரைப்படம் எப்போது வெளியாகும் என்கின்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
தற்போது நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு திரும்பி இருக்கின்றார். இடையில் உடல் எடை அதிகரித்து இருந்த அஜித் மீண்டும் கடகடவென தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். கார் ரேசில் கலந்து கொள்வதற்காக தனது உடலை ஃபிட்டாக மாற்றி இருக்கின்றார்.
நடிகர் அஜித் இதற்காக அவர் என்ன செய்தார் என்கின்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. நடிகர் அஜித் கிட்டத்தட்ட ஒரு 90 நாள் வெறும் வெந்நீர் மட்டுமே குடித்து டயட் இருந்து வந்தாராம். எந்த ஒரு உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்தாராம். அதற்கு பதிலாக புரோட்டின் மற்றும் விட்டமின் சம்பந்தமான மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாக சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள். எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.