அமீர்தான பிரச்சினை... இப்ப ஓகேவா? மீண்டும் இணையும் சூர்யா - வெற்றிமாறன்

by Rohini |
surya
X
surya

சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் படம் வருமா வராதா என்ற வகையில் அந்தப் படத்தின் நிலைமை மாறிப்போச்சு. ஒரு வேளை படம் டிராப் ஆகிவிட்டதாகவும் தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அந்தளவுக்கு இந்த கூட்டணியை பற்றி வரும் வதந்திகளுக்கு சிம்பு தரப்பில் இருந்தோ அல்லது வெற்றிமாறன் தரப்பில் இருந்தோதான் பதில் சொல்ல முடியும்.

ஆனால் யாரும் இதுவரை எந்தவித பதிலும் சொல்லவில்லை. தக் லைஃப் படத்திற்கு பிறகு சிம்பு வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது சம்பந்தமாக ஒரு புரோமோ வீடியோ ஷூட்டும் நடந்தது. ஆனால் நாள்தோறும் இந்த படத்தை பற்றி ஏதாவது ஒரு வகையில் வதந்திகள் பரவிக் கொண்டேதான் இருக்கின்றன.

ஆனால் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தைத்தான் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் திடீரென சிம்பு வெற்றிமாறனுடன் கூட்டணி என்ற தகவல் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்தது. ஆனால் படம் என்னமோ டேக் ஆஃப் ஆகாமலேயே இருக்கின்றன. இன்னொரு பக்கம் இந்தப் படத்தை யார் தயாரிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் இருந்தன.

இப்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தை கலைப்புலி தாணுதான் தயாரிக்கப் போகிறாராம். ஆனால் அது சிம்பு படம் இல்லையாம். சூர்யாவை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை எடுக்கப் போகிறாராம். ஏற்கனவே வாடிவாசல் படத்துக்காக தாணு வெற்றிமாறனுக்கு 18 கோடி சம்பளம் கொடுத்துள்ளாராம். அதனால் சூர்யாவை நான் அழைத்து வருகிறேன். அவரை வைத்து படத்தை எடு என தாணு சொன்னதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் அதில்தான் ட்விஸ்ட்டே உள்ளது. வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் படம் உருவாவப்போவது நிச்சயம். அது வாடிவாசல்தான். ஆனால் படத்தின் கதை மாற்றப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அமீர் இருப்பதால் சூர்யா தரப்பில் தயக்கம் காட்டுவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கதையே மாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story