என்னது லைலாவை லேடி சூப்பர்ஸ்டாருன்னு கூப்பிட்டாங்களா? அட அதையும் அவரே சொல்றாரா?

by Sankaran |
laila
X

laila

தமிழ்த்திரை உலகில் இந்த சூப்பர்ஸ்டார் பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை. தென்னிந்தியாவில் லேடி சூப்பர்ஸ்டாராக பவனி வந்தவர் நடிகை விஜயசாந்தி.

தமிழ்த்திரை உலகின் சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவரது அந்த சூப்பர்ஸ்டார் நாற்காலிக்குத் தான் போட்டி என பலரும் சொல்லி வசமாக வாங்கிக் கட்டிக்கொண்டார்கள். அதுல விஜய்க்கும், ரஜினிக்கும் கூட மோதல் வந்தது. அதனால்தான் காக்கா, கழுகு கதையே அரங்கேறியது.

நடிகர்களுக்குத் தான் என்றால் நடிகைகளுக்கும் கடும்போட்டி தான் போல. இங்கு நடிகை லைலா சொல்வதைப் பார்த்தால் அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.

நடிகை லைலா தான் முதன் முதலில் உன்னை நினைத்து படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டாராம். ஆனால் அந்தப் படத்தில் இருந்து திடீரென விஜய் விலகி விட்டார்.

அப்போது சூர்யா நடித்தார். அவருக்கு ஜோடியாக நடித்தது சினேகா. அதில் 2வது கதாநாயகியாக லைலா நடித்தார். அப்போது விட்ட வாய்ப்பை கோட் படத்தில் லைலா பிடித்து விட்டார். இந்தப் படம் விஜய் நடித்தது என்பதால் ஒரு படத்திலாவது அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நினைத்த லைலாவின் கனவு நிறைவேறியது.

அந்தப் படத்திலும் விஜய்க்கு ஜோடி சினேகா தான். லைலா அதற்கடுத்த கேரக்டர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கோட் படத்தின் படப்பிடிப்புக்காக லைலா நெல்லை வந்து கலந்து கொண்டாராம்.


அப்போது அங்குள்ளவர்கள் அவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைத்தார்களாம். நயன்தாராவுக்கு இப்போது படவாய்ப்பும் சரியாக இல்லை. தனுஷ், வலைப்பேச்சு என பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இந்த நிலையில் அவரது காதுக்கு இது எட்டி விடப்போகிறது என்பதால் லைலா சத்தம் காட்டாமல் இருந்தால் நல்லது.

நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார்னு சொல்றாங்க. அது அவரது திருமண ஆவணப்படத்தின் மூலம் சர்ச்சையைக் கிளப்பியது. இவர் தான் அப்படி சொல்ல வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் சர்ச்சைகளின் இடையே போதிய படவாய்ப்பும் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு இது தெரிந்தால் எரிகிற நெருப்பில் எண்ணை விட்டது போலாகி விடும். பார்த்துக்கோங்க.

Next Story