துப்பாக்கியை கொடுத்தவர் கிட்டயே மோத போறீங்களா?.. முன்னாடியே உஷாரான எஸ்கே!..

by Ramya |   ( Updated:2025-02-10 15:30:56  )
sivakarthikeyan
X

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகள் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக மாறி இருக்கின்றார். ஒவ்வொரு திரைப்படத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் சிவகார்த்திகேயன் கடைசியாக அமரன் என்கின்ற திரைப்படத்தின் நடித்திருந்தார்.

அமரன் திரைப்படம்: நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் கெரியரில் மிக முக்கிய படமாக மாறி இருக்கின்றது. இந்த படத்தின் மூலமாக அடுத்தடுத்து பெரிய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.


பராசக்தி திரைப்படம்: அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே 23 என்கிற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகின்றார். இன்னும் இப்படத்தில் 40 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கம்மிட்டானார்.

இந்த படத்திற்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. முதலில் சென்னையில் பச்சையப்பாஸ் கல்லூரியில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் தொடர்ந்து வைரலாகி வந்தது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஸ்ரீலங்காவில் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


ஜனநாயகன் படத்துடன் போட்டியா? இந்த திரைப்படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் முதலில் படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால் அந்த சமயத்தில் தான் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இருப்பதால் போட்டியாக பராசக்தி திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இதனை கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன் ஜனநாயகன் திரைப்படத்துடன் பராசக்தி திரைப்படம் வெளியாகக்கூடாது. அதற்கு முன்னதாகவே வேண்டுமென்றால் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கூறியிருக்கின்றாம்.

Next Story