புரோமோ ஷூட்லாம் எடுத்தீங்களேப்பா? சிம்பு வெற்றிமாறன் படத்திற்கு வந்த புதிய சிக்கல்

vetrimaran
சில தினங்களாகவே சிம்பு வெற்றிமாறன் படம் குறித்து சில வதந்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன.அதாவது அந்தப் படம் டிராப் ஆனதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் தான் தற்போது வெளியாகியிருக்கின்றன, தக் லைஃப் படத்திற்கு பிறகு சிம்பு அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரிய சாமி , வெற்றிமாறன் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
ஆனால் வெற்றிமாறனுடனான படம்தான் முதலில் ஆரம்பிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. அதற்கான புரோமோ வீடியோலாம் தயாரானது. அந்த ஷூட் எடுத்த போது சிம்பு அருகில் நெல்சனும் இருந்தார். நெல்சன் இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். சிம்பு வெற்றிமாறன் படத்தின் புரோமோ வீடியோ ஆகஸ்ட 15 ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
உண்மையில் அந்தப் படம் டிராப் ஆகவில்லையாம். ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஷூட்டிங்கை ஆரம்பிக்க இருக்கிறார்களாம். சிம்பு தரப்பில் விசாரித்த போது அப்படியெல்லாம் இல்லை என்றுதான் கூறுகிறார்களாம். ஆனால் படத்திற்கு முதலில் பிராஃபிட் ஷேர் என்ற அடிப்படையில்தான் சிம்பு சம்பளம் பேசியிருந்தாராம். ஆனால் திடீரென தனக்கு 45 கோடி சம்பளம் வேண்டும் என கேட்டதாக தெரிகிறது.

simbu
இதனால் தாணு தரப்பில் கடும் அதிருப்தி. சிம்பு கேட்கும் 45 கோடி வெற்றிமாறனுக்கு ஏற்கனவே 20 கோடி சம்பளம் பேசியாகிவிட்டதாம். அதனால் 100 கோடி வரை பட்ஜெட் போய்விடும். அதுவும் சிம்பு படத்திற்கு 100 கோடி பட்ஜெட் எனும் போது அது ஏற்புடையதாக இருக்காது என்பதால் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். ஆனால் கண்டிப்பாக ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.