விஜயைப் படுகுழியில் தள்ளும் முயற்சி நடக்கிறதா? அம்பேத்கர் விழாவில் அனல் பறக்க பேசிட்டாரே...!
விஜயின் அனல் பறக்கும் பேச்சு குறித்தும், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளாதது குறித்தும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனே அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தளவுக்கு அவருக்கு ஆளும்கட்சியின் அழுத்தம் இருக்குன்னு பலரும் சொன்னாங்க. இந்த நிலையில் திருமாவளவனே அதற்கு விளக்கம் கொடுத்துவிட்டார். அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை. அவர் விஜயுடன் இணைந்து மேடையில் பேச ஆரம்பித்தால் கூட்டணியான்னு பிரச்சனைகள் எழும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் வரலன்னும் சொல்லிவிட்டார்.
விஜய் தனது மாநாட்டில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்றார். இதுவரைக்கும் எந்தக் கட்சியுமே அதற்கு உடன்பாடாக இருந்தது இல்லை. திருமாவளவன் கூட உங்க பலம் என்னன்னு தெரியாம விஜய் இப்படி பேசுவது அவரது அரசியல் முதிர்ச்சி இன்மையைக் காட்டுகிறது என்றார்.
அதே நேரம் விஜய் அம்பேத்கர் விழாவில் பேசும்போது திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர். அவராலேயே இந்த விழாவுக்கு வர முடியாத நிலைமை. அப்படின்னா அரசியல் அழுத்தம் அவருக்கு எவ்வளவு இருக்கும்? ஆனா இன்னைக்கு அவரோட நினைப்பு முழுவதும் நம்ம பக்கம் தான் இருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுனது தான் ஃபயர். இதுதான் நேற்று முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது. 'கூட்டணி கணக்குகளை மட்டுமே இறுமாப்புடன் 200ஐ வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு நான் விடுக்கும் எச்சரிக்கை... நீங்கள் உங்கள் சுயநலத்துக்காகப் பலவழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே அவரை மைனஸ் ஆக்கி விடுவார்கள்' என்றார். இப்படி சொன்னது திருமாவளவன் எங்களோடு தான் இணைவார் என்ற நம்பிக்கையில் தான் விஜய் இப்படி பேசி உள்ளார்.
இதே நேரத்தில் விஜயின் பேச்சு பலருக்கும் பிடிக்காமல் போய் உள்ளது. விஜயின் கட்சி திருமாவளவனுடன் இணைவதற்காக அல்ல. இதை முதலில் விஜய் உணர வேண்டும். எல்லாரையும் போல தான் அவரையும் அழைத்துள்ளார். இந்த சூழலில் விசிக இருந்தால் போதும் என விஜய் நினைக்கிறாரோ என எண்ணத்தோன்றுகிறது. தென்மாவட்டங்களில் விஜயின் அரசியல் வருகையை எல்லாரும் விரும்புறாங்க. அப்படிப்பட்டவர்கள் விசிக தான் முக்கியம் என விஜய் நினைப்பதை வேறு மாதிரி நினைக்கிறார்கள்.
இதை விஜய் எப்படி புரிஞ்சிக்கப் போறாருன்னு தெரியல. இதை பேலன்ஸ் பண்ணினால் தான் விஜய் கட்சியின் மீது தற்போது எழுந்துள்ள விமர்சனம் மெல்ல மறைய வாய்ப்பு இருக்கு. விஜயைக் கவிழ்ப்பதற்கான வேலை நடக்குது. அவர் கூட இருந்து குழிபறிப்பதற்கான வேலை தான் இதெல்லாம். அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விஷயம்தான் இது எல்லாம் எனவும் வெளியில் உள்ள பார்வையாளர் ஒருவர் சொல்கிறார். அரசியல்களத்தில் விஜயகாந்துடன் முதலில் யார் எல்லாம் சேர்ந்தார்களோ அவரை அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்.
அப்படி தான் விஜய்க்கும் அம்பேத்கரை வைத்து ஒரு சூழலை வைத்து ஏற்படுத்துகிறார்களோ என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதனால் விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. வெள்ள நேரத்தில் எல்லாரையும் வந்து பார்க்கலன்னும் விமர்சனம் வந்தது. அதற்கும் தண்ணீருல நின்னு சீன் போடுறதுல எனக்கு உடன்பாடு இல்லன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.