கொளுத்திப்போட்ட லோகேஷ்!.. ஆசையா காத்திருக்கும் ஃபேன்ஸ்!.. என்ன செய்யப்போகிறார் விஜய்?!...

by MURUGAN |   ( Updated:2025-05-13 11:37:34  )
lokesh
X

விஜய் ஜனநாயகன் படம் முடிந்ததும் அரசியலில் முழுமூச்சாக இறங்கப் போகிறார். அரசியலே தெரியாது என்று நினைப்பவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பார் என்றும் பேசப்படுகிறது. தமிழக வெற்றிகழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியதில் இருந்தே அனைவரின் கவனத்தையும் பெற்று விட்டார் விஜய்.

சினிமாவில் அவர் பீக்கில் இருக்கும்போதே முழுக்குப் போட்டுவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் ரசிகர்களுக்கு இது சோகமா, உற்சாகமா என்று ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தி விடலாம். விஜயின் கடைசி படமான ஜனநாயகன் குறித்து இப்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று கிடைத்து இருக்கிறது.

ஜனநாயகன் பற்றி லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில ஒரு விஷயம் சொல்லிருக்காரு. எனக்கு மாஸ்டர் 2, லியோ 2 எல்லாம் பண்ணனும் அப்படி இப்படின்னு சொல்லிருக்காரு. உடனே ஆகா விஜய்க்கு ஜனநாயகன் கடைசி படம் கிடையாது. மாஸ்டர் 2, லியோ 2 படம் எல்லாம் வருதுன்னு போஸ்டர் எல்லாம் போட்டுட்டாங்க. இதெல்லாம் விஜய் காதுக்குப் போனதாகத் தெரியவில்லை.


அவர் ஜனநாயகன் படத்தை முடிக்கிறதுலயே தீவிரமா இருக்காராம். சமீபத்தில் பையனூரில் ஒரு பில்டிங்ல ஆக்ஷன் காட்சிக்கான லீடு எடுத்தாங்களாம். விஜய் மாஸா என்ட்ரி கொடுக்குற அந்த சீனை 2 நாளா எடுத்தாங்களாம். அதே மாதிரி இன்னும் ரெண்டு நாள் சூட்டிங்தான் விஜய்க்கு இருக்குமாம். அப்புறமா மற்ற நடிகர்களை வைத்து இன்னும் 15 நாள் சூட்டிங் எடுப்பாங்கன்னும் சொல்றாங்க. ரசிகர்களைப் பொருத்தவரை மீண்டும் விஜய் நடிப்பார் என்றே நினைக்கிறார்கள். ஆனால், விஜய்க்கு அந்த எண்ணம் இல்லை என சொல்லப்படுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படம் ஜனநாயகன். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் விஜயின் கடைசி படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. படம் வரும் 2026 பொங்கலையொட்டி ஜனவரி 9ல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story