ஜனநாயகன் படத்தில் விஜய் பாடுகிறாரா? அரசியலில் தோல்வின்னா என்ன செய்வார்?

by SANKARAN |
vijay tvk.
X

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படம் ஜனநாயகன். இந்தப் படம் தான் தன் திரையுலகப் பயணத்தில் கடைசி படம் என்றும் அடுத்ததாக தான் முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் விஜய் தெரிவித்து இருந்தார். இதனால் சினிமா வட்டாரத்திலும் சரி. அரசியல் வட்டாரத்திலும் சரி. ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி ரோல் மாடலாக பெரியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கார், வேலுநாச்சியாரின் படங்களையும் வைத்து பெரிய மாநாட்டையே நடத்தி அனைத்துத் தரப்பினரையும் அசர வைத்து விட்டார். அந்த மாநாட்டில் கட்சிக்கொடி, கொள்கைகள் என எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்து விட்டார்.

தொடர்ந்து அரசியலிலும் அவ்வப்போது பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மாவட்ட வாரியாக தனது அரசியலுக்கான சாதக, பாதகங்களை அலசி வருகிறார்.


தான் எந்தத் தொகுதியில் போட்டி இடுவது என்பதை இதில் இருந்தே தீர்மானம் செய்யவும் உள்ளார். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தனது யூடியூப் சேனல் ஒன்றில் பதில் அளித்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் விஜயை மக்கள் அரசியலில் ஏமாற்றிட்டாங்கன்னா அவரது அடுத்த திட்டம் என்னவா இருக்கும்னு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சித்ரா லட்சுமணன் அளித்துள்ள பதில் இதுதான்.

விஜய் இப்ப சினிமா நடிகர் மட்டும் அல்ல. ஒரு அரசியல்வாதியும் கூட. அதனால அரசியலில் சின்ன சறுக்கல் ஏற்பட்டா கூட அடுத்து என்ன செய்யணும்னு ஒரு பிளான் பி விஜய்கிட்ட இல்லாமலா இருக்கும் என்றும் பதில் அளித்துள்ளார் சித்ரா லட்சுமணன். அதே போல ஜனநாயகன் படத்தில் விஜய் பாடுவாரா என்றும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜனநாயகன் படத்துல விஜய் பாடுவதைப் பற்றி முறையான அறிவிப்பு இன்னும் வரலன்னாலும் அந்தப் படத்தில் நிச்சயமாக விஜயின் பாடல் இடம்பெறும் என்பது தான் என்னுடைய எண்ணம் என்று தெரிவித்துள்ளார்.

Next Story