ராஜமவுலி படத்தில் நடிக்கும் சியான் விக்ரம்?!. எல்லாத்துக்கும் ஐடி ரெய்டுதான் காரணம்!....

by MURUGAN |
chiyan vikram
X

Chiyan Vikram: சியான் விக்ரமுக்கு இது போதாத காலம் போல. சூர்யாவை போலவே இவரின் படங்களும் தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. விக்ரமின் படம் எப்போது தியேட்டரில் நல்ல வசூலை பெற்றது என்பது யாருக்குமே நினைவில் இல்லை. அவரும் பல கதைகளை கேட்டு அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நடித்து பார்க்கிறார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

அருண்குமார் இயக்கத்தில் நடித்த வீர தீர சூரன் படமும் ஊத்திக்கொண்டது. இந்த படத்திற்காக தனது சம்பளத்தில் 9 கோடியை விட்டுக்கொடுத்தார் விக்ரம். ஏனெனில், படத்தின் ரிலீஸின் போது ஓடிடி உரிமை காரணமாக நீதிமன்றத்தில் சில நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து பஞ்சாயத்து ஆகிவிட்டது. எனவே, காலையில் வெளியாக வேண்டிய படம் மாலைதான் வெளியானது. இதுவே படத்தின் வசூலை கடுமையாக பாதித்தது.

படம் ஹிட் என சியான் விக்ரம் வீடியோவெல்லாம் போட்டாலும் 3 நாட்களில் தியேட்டரில் காத்து வாங்கியது. இந்த படத்திற்கு பின் மண்டேலா,மாவீரன் போன்ற படங்களை இயக்கிய மடோனே அஸ்வின் இயக்கத்தில் நடிக்க சியான் விக்ரம் ஒப்புக்கொண்டிருந்தார். இந்த படத்தில் நடிக்க 50 கோடி சம்பளம் பேசியிருந்தார் விக்ரம்.

ஆனால், வீர தீர சூரன் பட ரிசல்ட்டுக்கு பின் அவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என தயாரிப்பாளர் சொல்ல 40 கோடிக்கு விக்ரம் ஒத்துகொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த படம் டேக் ஆப் ஆகுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில், இப்போது நடந்துவரும் ஐடி ரெய்டில் சிக்கியுள்ள ஒருவர்தான் இந்த படத்திற்கு பைனான்ஸ் செய்வதாக இருந்தது. அவர் இப்போது ஐடி ரெய்டுக்கு பயந்து வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.

எனவே, ஷூட்டிங் இன்னமும் துவங்கப்படவில்லை. படம் டிராப் ஆகவும் அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மகேஷ்பாபுவை வைத்து எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் ஒரு நெகட்டிவ் வேடத்தில் நடிக்க சியான் விக்ரமை கேட்டிருக்கிறார்கள். அதோடு, விக்ரம் கேட்ட சம்பளத்தையும் அவர் கொடுப்பதாக சொல்லிவிட்டனர்.

மடோனே அஸ்வின் படம் சந்தேகமாக இருப்பதால் ராஜமவுலி படத்தில் விக்ரம் நடிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், ராஜமவுலி வருடக்கணக்கில் படமெடுப்பவர். எனவே, அதிக நாட்கள் கால்ஷீட் கேட்பார். எனவே, சியான் விக்ரம் என்ன முடிவெடுப்பார் என தெரியவில்லை. அவரும் சூர்யாவை போலவே ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் என போராடிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் நினைத்தது போல எதுவும் நடிக்கவில்லை’ என்றே சொல்ல வேண்டும்.


Next Story