180 கோடிக்கு ரெய்டுனா!.. 1800 கோடிக்கு வராதா?.. புஷ்பா 2 இயக்குனரையும் விட்டு வைக்கல போலயே!..

by Ramya |
sugumar
X

தெலுங்கில் இந்த வாரம் ரெய்டு வாரம் என்பது போல் அடுத்தடுத்து முக்கிய பிரபலங்களின் வீடுகளில் அமலாக்க துறையினர் ரெய்டில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் தெலுங்கில் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இது ஆந்திர சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இவர் கடைசியாக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் எஸ் ஜே சூர்யா வெளிவந்த கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இப்படம் வசூல் ரீதியாக பல தோல்வியை சந்தித்தது. மொத்தமாக 200 கோடியை கூட வசூல் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.


இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று தில் ராஜு வீட்டில் அமலாக்க துறையினர் ஐடி ரெய்டில் ஈடுபட்டார்கள். தில் ராஜுவின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவரது மனைவி தேஜஸ்வனியின் வங்கி லாக்கர்கள் அனைத்தும் சோதனை இடப்பட்டது. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது, தயாரிப்பாளர் தில் ராஜுவை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களின் வீடுகளிலும் ஐடி ரெய்ட் நடத்தப்பட்டது.

இந்த நிறுவனம்தான் கடந்த வருடம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்த புஷ்பா 2 திரைப்படத்தை தயாரித்தவர்கள். அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா ஆகியோ நடிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1800 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து மைத்ரீ மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்று வந்தது. ஐடி ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் இதுவரை வருமானவரித்துறை அதிகாரிகள் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இன்று விமான நிலையத்திற்கு வந்த சுகுமாரை வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து அப்படியே வீட்டுக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் இருக்கும் முன்னணி பிரபலங்களின் வீடுகளில் அதிரடியாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கு காரணம் என்ன என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. அது மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் பல கோடிகளில் வசூல் செய்து வரும் நிலையில் கணக்குகள் ஒழுங்காக இருக்கின்றதா?


வரி ஒழுங்காக செலுத்தப்படுகின்றதா? என்பதை தெரிந்து கொள்வதற்காக வருமான வரித்துறையினர் இப்படி அதிரடி சோதனையில் ஈடுபடுகிறார்களா? அல்லது பலி வாங்கும் முயற்சியா? என்று தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். புஷ்பா 2 திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக அல்லு அர்ஜுன் வீட்டிலும் சோதனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Next Story