ஹீரோவே மாறிட்டாரே!.. இவன் தந்திரன் 2 படத்துக்கு பூஜை போட்டாச்சு!.. சீக்கிரமே வந்துடுமாம்!..

by SARANYA |   ( Updated:2025-07-07 09:09:28  )
ஹீரோவே மாறிட்டாரே!.. இவன் தந்திரன் 2 படத்துக்கு பூஜை போட்டாச்சு!.. சீக்கிரமே வந்துடுமாம்!..
X

நடிகர் கௌதம் கார்த்திக் கடைசியாக சிலம்பரசனுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது இவன் தந்திரன் பாகம் 2 படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கௌதம் கார்த்திக் ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி, ஆகஸ்ட் 16, 1947, பத்து தல போன்ற பல படங்களில் நடித்திருந்தும் எந்த படமும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. மேலும், மிஸ்டர் சந்திரமௌலி என்ற படத்தில் தன் தந்தை நடிகர் கார்த்திக்குடன் இணைந்து நடித்திருந்தார்.


இவன் தந்திரன் முதல் பாகம் கௌதம் கார்த்திக் மற்றும் ஆர்.ஜே. பாலாஜியின் கெமிஸ்ட்ரி, நகைச்சுவை, மற்றும் சமூக அவலங்களை வெளிப்படுத்திய வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால், இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று இவன் தந்திரன் 2 படத்தின் பூஜையில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள இவன் தந்திரன் 2 படத்தில் சமுத்திரகனி, சரண், தம்பி ராமையா, சிந்து பிரியா, ஜகன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். எஸ்.தமன் இசையில் ஆக்‌ஷன் த்ரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக உருவாக உள்ளது.

2025 ஜூன் 30 அன்று இவன் தந்திரன் படத்தின் முதல் பாகத்தின் 8 ஆண்டு நிறைவைக் கொண்டாடிய படக்குழு தற்போது படத்தின் தொடர்ச்சியை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக, சரண் ஹீரோவாக நடிக்கிறார். வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சரண்.

Next Story