அலப்பறை கெளப்புறோம் தலைவரு நிரந்தரம்!.. கொல மாஸாக வெளியான ஜெயிலர் 2 டீசர்!..

by Ramya |   ( Updated:2025-01-14 13:05:05  )
jailer 2
X

Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் இந்த வயதிலும் மாஸ் நடிகராக வலம் வரக்கூடியவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் புகழ் தமிழ் சினிமாவோடு மட்டுமல்லாமல் இந்திய சினிமா வரையிலும் பரவி இருக்கின்றது. 50 ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். தன்னுடைய ஸ்டைல் மற்றும் நடிப்பு மூலமாக லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கின்றார்.

பொதுவாக ரஜினிகாந்தின் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும். இவர் கடைசியாக வேட்டையன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை ஏ எல் ஞானவேல் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ஒரு சுமாரான வெற்றி படமாக அமைந்திருந்தது.

உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 250 கோடி வரை வசூல் செய்திருந்தது. வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் ஷாகீர், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் வரும் பிப்ரவரி மாதத்துடன் முழு படத்தின் படப்பிடிப்பு முடிவடைய இருக்கின்றது. இதனை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார் என்கின்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு விருந்தாக ஜெயிலர் 2 திரைப்படத்தின் அறிவிப்பை ஒரு டீசராக வெளியிட்டு இருக்கிறார்கள்.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயக், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவா ராஜ்குமார் ஆகியோர் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, வசூலிலும் சாதனை படைத்தது.


உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் 2வது பாகத்தை எடுப்பதற்கு நெல்சன் தயாராகி இருக்கின்றார். இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார்.

எப்போதும் போல் நெல்சன் ஸ்டைலில் வெளியாகி இருக்கும் டீசர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. நடிகர் ரஜினிகாந்த் ஆக்ஷனில் மிரட்டி இருக்கின்றார். பொங்கல் பண்டிகைக்கு ரஜினி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக இந்த டீசர் அமைந்திருக்கின்றது.


Next Story