இது ஜெயிலர்2 படமா? இல்ல மலையாளா படமா? மல்லுக்கட்டும் மல்லுவுட் பிரபலங்களின் லிஸ்ட்…

Jailer2: நெல்சன் திலீப் குமாரின் அடுத்த திரைப்படம் ஆக உருவாக்கி வரும் ஜெயிலர் இரண்டாவது பாகத்தின் பிரபலங்களின் பட்டியல் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் ஒரு சுவாரசிய சம்பவமும் இதில் நடந்திருக்கிறது.
ரஜினிகாந்தின் சினிமா கேரியர் ஆட்டம் கண்டு கொண்டிருந்த நிலையில் வெளியான திரைப்படம் ஜெயிலர். அப்படம் நெல்சன் திலீப் குமாரின் திரைப்பயணத்திற்கும் முக்கிய படமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிறரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் படம் தாறுமாறு சூப்பர் ஹிட் ஆக அமைந்தது.
இப்படத்தில் கதை பெரிய அளவு வித்தியாசம் இல்லை என்றாலும் அதற்காக அமைக்கப்பட்ட திரைக்கதை பிளஸாக அமைந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கன்னட பிரபலமான சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மோகன்லால், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் இணைய படம் பக்கா ஹிட் கொடுத்தது.
தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் தன்னுடைய வேட்டையன் மற்றும் கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு ஜெயிலர்2 திரைப்படத்தில் விரைவில் இணைய இருக்கிறார். முதல் பாகத்தைப் போல இதிலும் பல முன்னணி பிரபலங்கள் இணைய இருக்கின்றனர்.
கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் இருந்து பாலகிருஷ்ணா, ஹிந்தியில் இருந்து அமீர்கான் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுமட்டும் இல்லாமல் முதல் பாகத்தை போல இதிலும் நடிகர் மோகன்லால் இணைந்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் மலையாளத்தில் முன்னணி பிரபலங்களாக இருக்கும் பல இப்படத்தில் இணைந்திருப்பது தான் சுவாரசியமான தகவல். சமீபத்தில் வெளியான வீரதீர சூரன் திரைப்படத்தில் முக்கிய இடத்தில் நடித்த சுராஜ் ஜெய்லர் 2 திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.
வினீத் தட்டில் டேவிட், சுனில் சுகடா, கோட்டயம் நசீர், அன்னா ரேஷ்மா ராஜன், சுஜித் சங்கர் ஆகியோரும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் குணச்சித்திர வேடங்களில் கலக்கிய இவர்கள் இப்படத்தில் இருப்பதால் படத்தில் மேலும் எதிர்பார்ப்பு உருவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.