தலைவருனாலே ரெக்கார்ட் தானே!.. பாஸ் கொல மாஸ்!.. சாதனை படைத்த ஜெயிலர் 2 டீசர்..
நடிகர் ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவில் 74 வயதை கடந்த போதிலும் தற்போது வரை மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து அடுத்த அடுத்த திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படத்தை ஏ.எல் ஞானவேல் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இருப்பினும் இந்த திரைப்படம் ஒரு சுமாரான வெற்றி படமாக அமைந்தது. இப்படத்திற்கு முன்னதாக வெளியான ஜெயிலர் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் வேட்டையன் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.
இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்து அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் மார்ச் மாதம் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றார்.
இப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகின்றார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் இப்படத்தின் அனவுன்ஸ்மென்ட் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர் நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்று நேற்று வெளியானது. டயலாக் எதுவும் இல்லாமல் ஸ்டைலான நடை. ஆரோக்கியமான பார்வை என மாஸ் காட்டி இருக்கின்றார் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் பட பாணியில் தன்னுடைய ஸ்டைலில் டீசரை உருவாக்கி இருக்கின்றார் நெல்சன்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான ஜெயிலர் 2 புரோமோ மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கின்றது. இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்து ரசிகர்கள் தலைவர் வந்தாலே ரெக்கார்ட் தான் என்று தங்களது கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.