தலைக்கேறிய குடிபோதை!.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜெயிலர் பட வில்லன்.. அலறிய மக்கள்..!
மலையாள சினிமாவில் பிரபலமான வில்லனாக வளம் பெறுபவர் நடிகர் விநாயகன். ஜெயிலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிலும் கவனிக்கத்தக்க நடிகராக மாறியிருக்கின்றார் விநாயகன். சினிமாவில் என்னதான் சிறப்பான நடிகராக வலம் வந்தாலும் சமூகத்தில் பொறுப்பற்ற நபராகவே இருந்து வருகின்றார். மலையாள சினிமாவில் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.
அதிலும் வில்லன் கதாபாத்திரத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த கதாபாத்திரமாகவே அவர் மாறிவிடுவார். இவரின் நடிப்புக்கு கேரளா மாநில அரசு சிறந்த நடிகருக்கான விருது வழங்கியிருக்கின்றது. சினிமாவில் இவருக்கு எந்த அளவுக்கு மரியாதை இருக்கின்றதோ அந்த மரியாதையை பொது இடங்களில் கெடுத்து வருகின்றார் விநாயகன்.
அதற்கு முக்கிய காரணம் அவரின் குடி போதை தான். சமீப நாட்களாக தொடர்ந்து இவர் செய்யும் செயல்கள் சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் சட்டை இல்லாமல் அமர்ந்து விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் அவரை கைது செய்த காவல்துறையினர் பின்னர் விடுவித்தனர்.
எங்கு சென்றாலும் முழு போதையில் சென்று பிரச்சனை செய்து கொண்டிருக்கின்றார். இதனால் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவரை தங்களின் படங்களில் கமிட் செய்வதற்கு தொடர்ந்து யோசனை செய்து வருகிறார்கள். இவர் தமிழில் முதன்முதலாக திமிரு என்கின்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தாலும் பிறகு தமிழில் எந்த ஒரு திரைப்படத்திலும் இவர் நடிக்கவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு அப்படத்தில் மிகச் சிறப்பாக பேசப்பட்டது. என்னதான் சினிமாவில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்தாலும் பொது இடங்களில் தனது மரியாதையை காப்பாற்றி விட தவறி விடுகின்றார் விநாயகன்.
ஓவர் குடிபோதையில் அலப்பறை செய்து தொடர்ந்து பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்து வருகின்றார். அந்த வகையில் தற்போது விநாயகர் புது சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார். தனது வீட்டில் இருந்து கொண்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் செய்து இருக்கின்றார். போதையில் அக்கம் பக்கத்தை சேர்ந்த நபர்களை மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளால் திட்டி இருக்கின்றார்.
அதுவும் வேட்டியை சரியாக கட்டாமல் நிர்வாணமாகவும் நின்று இருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது. அவரின் ஆபாச வார்த்தையை கேட்க முடியாதா அங்கிருந்த பலரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் அங்கிருந்து அவர்கள் வெளியில் சென்று விட்டார்கள். இவரின் செயல் குறித்த வீடியோ தற்போது இணையதள பக்கங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு கடும் விமர்சனங்களை கொடுத்து இருக்கிறார்கள்.