வேறவழியில்லாம அனிருத் பாட்டு ஹிட்டாகுது!. ரஹ்மான்தான் மாஸ்!.. கொளுத்திப்போட்ட பிரபலம்!...
Aniruth rahman: ரஜினியின் நெருங்கிய உறவினர் என்பதால் தனுஷுக்கும் பழக்கமானார் அனிருத். அப்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இசையில் சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தில் அனிருத் இருந்தார். தனுஷோடு சேர்ந்து கொண்டு இருவரும் ஜாலியாக டியூன்களை போட்டு அதற்கு தனுஷே வரிகளை எழுதி பாடல்களை உருவாக்கினார்கள்.
அப்படி உருவான ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலை யுடியூப்பில் பதிவிட அது அவர்கள் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. வெளிநாடுகளிலும் இந்த பாடலுக்கு நடனமாடி பலர் சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டார்கள்.
அதன்பின் தனுஷ் நடித்த மற்றும் தயாரித்த திரைப்படங்களுக்கு அனிருத்தே இசையமைத்தார். 3, எதிர் நீச்சல், மாரி, நானும் ரவுடிதான் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், நெல்சன் என ஒரு குரூப் அனிருத் பக்கம் போனது.
தொடர் ஹிட் பாடல்களை கொடுத்தார் அனிருத். ஒரு கட்டத்தில் விஜயின் படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். பேட்ட படத்தில் ரஜினிக்கு இசையமைத்தார் அனிருத். அவரின் துள்ளலான இசை ரஜினிக்கும் பிடித்துப்போக அதன்பின் ரஜினி நடிக்கும் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்தார். இதில், ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
மாஸ்டர், பீஸ்ட், விக்ரம், லியோ, இந்தியன் 2, வேட்டையன், கூலி, தளபதி 69 என பெரிய நடிகர்களின் படங்களுக்கு அனிருத்துதான் இசை. இப்போது தமிழ் சினிமாவில் அதிக படங்களுக்கு இசையமைப்பவர் அனிருத் மட்டுமே. இந்நிலையில், இளையராஜாவை கடுமையாக விமர்சித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இப்போது அனிருத்தையும் விமர்சனம் செய்திருக்கிறார்.
அனிருத் இசை ரஹ்மானின் இசைக்கு சவாலாக இல்லை என நான் சொல்ல தேவையில்லை. அது ரசிகர்களுக்கே தெரியும். இப்போது வேற வழி இல்லாமல் அனிருத்தோட பாட்டு எல்லாம் ஹிட் ஆகுது. பெரிய தயாரிப்பாளர்கள், ஷங்கர் மாதிரி பிரம்மாண்ட பட இயக்குனர்கள் அவர்கிட்ட போறாங்க. ஆனாலும் உலக அளவில் நம்பர் ஒன் இசையமைப்பாளர் என்றால் அது ரஹ்மான்தான். அனிருத்தின் பாடல்கள் ஹிந்தி, தெலுங்கில் அந்த அளவுக்கு ரீச் ஆகவில்லை. ஆனால், ரஹ்மானின் பாடல்கள் சர்வதேச அளவில் ரீச் ஆகியிருக்கு. இப்போது வரை அதை யாராலும் தொட முடியவில்லை’ என சொல்லி இருக்கிறார்.