பாசிஸம்னா என்னன்னே தெரியாம பேசிய விஜய்... வெளுத்து வாங்கும் பிரபலம்

by sankaran |   ( Updated:2024-10-31 03:30:29  )
vijay jamesvasanthan
X

தளபதி விஜய் கோட் படத்தை முடித்த கையோடு தனது 69வது படத்தை தொடங்கி விட்டார். எச்.வினோத் இயக்கி வருகிறார். இதுதான் அவரது கடைசி படம். அதன்பிறகு முழுநேர அரசியல் என்றார்.

அந்த வகையில் இதற்கான முதல் மாநில மாநாட்டை சமீபத்தில் விக்கிரவாண்டியில் உற்சாகமாகத் தொடங்கினார். அது சரவெடியாக வெடித்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

'அவங்க பாசிஸம் பண்ணினா நீங்க என்ன பாயாசமா?'ன்னு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆவேசமாக தனது முதல் மாநாட்டில் பேசினார். அந்த வகையில் அந்தக் கருத்து பல்வேறு சர்ச்சைக்கு உள்ளானது.

மாநாட்டில் அவர் தனது எதிரி யார்? தனது பலம் என்ன என்றும் தெரிவித்து இருந்தார். புரட்சிகரமாக இருந்தாலும் இந்த மாநாட்டுக்குப் பிறகு அவர் எப்படி அறிக்கை விடுவார்? பிரஸ்மீட்டை எப்படி எதிர்கொள்கிறார் என்றெல்லாம் தெரிந்து கொண்டு தான் அவரது அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதைக் கூற முடியும்.

இப்போதைக்கு வழக்கம் போல எல்லாத் தலைவர்களும் சொல்லும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவரது பாசிஸம் கருத்து குறித்து பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி அரசியல் விவாதத்தில் பங்குபெற்ற தவெக பிரதிநிதி பாசிஸம் என்றால் என்ன என்று கேட்கப்பட்டதற்கு தவறான ஒரு விளக்கத்தைக் கூறினார். இதைத்தான் அவர்கள் தலைவருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்பது பின்னர் விளங்கியது.

தனிமனித உரிமைகளை, நாட்டு நலனுக்காக எனக்கூறி, மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிஸம் எனப்படும். பாசிஸம் என்பது கொடுந்தேசியம் என்று விளக்கம் அளித்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

கட்சி ஆரம்பித்ததும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து ஆதரவாகப் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அதன்பிறகு அவருடன் கூட்டணிக்கு வாய்ப்பு என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் மாநாட்டுக்குப் பிறகு அவரது கொள்கை எங்களுடன் உடன்படவில்லை. அது கருவாட்டு சாம்பார் போல உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Next Story