Connect with us
jananayagan

Cinema News

ஜனநாயகன் விழாவில் அஜித், ரஜினி, கமல்?… ஹைப் ஏத்துறாங்களே!..

Jana Nayagan: விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக வெளியாக இருக்கும் ஜனநாயகன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ஒரு முக்கிய திட்டத்தை தயாரிப்பு நிர்வாகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் நடிகராக இருப்பவர் விஜய். தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தவர் திடீரென தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியை அறிமுகம் செய்து ஆச்சரியப்படுத்தினார். அதிலும் முதல் அறிக்கையிலேயே ஒப்புக்கொண்ட படத்தை முடித்த கையோடு மொத்தமாக சினிமாவில் இருந்து விலகினார். 

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், ஜனநாயகன் உள்ளிட்ட படங்களே தமிழ் சினிமாவில் விஜயின் கடைசி படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஹெச்.வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் படமே அவரின் கேரியரில் கடைசி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். ஜனநாயகன் திரைப்படத்துக்கு விஜயின் சம்பளம் மட்டுமே 275 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தெலுங்கில் வெளியான பகவந் கேசரி படத்தின் ரீமேக்காக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இப்படத்தின் போஸ்டர் எம்ஜிஆர் ஸ்டைலில் இருக்கவும் அரசியல் படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

Jana Nayagan

இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை கிறிஸ்துமஸ் தினத்தில் மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்த இருப்பதாக திட்டமிட்டு இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் விஜயின் கடைசி படமாக இருப்பதாக 20க்கும் அதிகமான ஸ்டார்களை அழைக்கவும் திட்டம் இருக்கிறதாம். 

அந்த லிஸ்ட்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்டோர்களும் கலந்துக்கொள்ள அழைப்பு கொடுக்க இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் வருவதற்கு வாய்ப்பு குறைவு தான் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் விஜயின் ஆரம்பகாலத்தில் அவருடன் நடித்த சூர்யா இணையலாம். அதுபோல அஜித் தற்போது நிறைய இடங்களில் கலந்துக்கொள்வதால் அவர் வருவதற்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது. தனுஷ், சிம்பு கண்டிப்பாக வருவார் என்றே நம்பப்படுகிறது. 

இப்படி ஒரு விழா நடந்தால் கண்டிப்பாக அது சினிமா உலகில் பெரிய விஷயமாக பார்க்கப்படும். ஜனநாயகன் படத்திற்கு பெரிய வரவேற்பும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top