1. Home
  2. Cinema News

Jananayagan: ‘கில்லி’ படத்துல வச்ச மிச்சமா அது? ‘ஜனநாயகன்’ வரை தொடருது போல

Jananayagan: ‘கில்லி’ படத்துல வச்ச மிச்சமா அது? ‘ஜனநாயகன்’ வரை தொடருது போல

Jananayagan: எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கின்றது. இது விஜய்க்கு கடைசி படம். அதனால் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்னொரு பக்கம் அரசியல்வாதியாகவும் விஜய் தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். சமீபத்தில் அவருடைய இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அடுத்து மக்களை நேரடியாக சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஜனநாயகன் திரைப்படத்தை பொறுத்த வரைக்கும் இதில் அரசியல் வசனங்கள் மிகக் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்போது விஜய் நேரடியாகவே அரசியலில் தைரியமாக இறங்கி இருப்பதால் அதுவும் இரண்டு மாநாட்டிலும் எதிர்க்கட்சிகளை தன்னுடைய வசனத்தால் துவம்சம் செய்து இருக்கிறார்.

அப்படி என்றால் படத்திலும் இன்னும் வசனங்கள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி திரைப்படம் என ஓரளவுக்கு நிருபணம் ஆகிவிட்டது. அந்தப் படம் தெலுங்கில் பெரிய ஹிட். அதைப்போல தமிழிலும் விஜய்க்கு ஏற்றபடி சில காட்சிகளை இந்த படத்தில் மாற்றி அமைத்து இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் படத்தில் எம்ஜிஆர் நடித்த எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் வரும் பாடலான நான் ஆணையிட்டால் பாடலை ஜனநாயகன் படத்தில் ரீமிக்ஸ் செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அது சம்பந்தமான போஸ்டர் தான் கையில் சாட்டையுடன் விஜய் நிற்கும் புகைப்படம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கில் பகவந்த் கேசரி திரைப்படத்தில் அரசியல்வாதியாக நரேன் நடித்திருப்பார். அதே கேரக்டரில் ஜனநாயகன் படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறாராம்.

பகவந்த் கேசரி படத்தில் ஒரு காட்சியில் போலீஸான பாலகிருஷ்ணன் அமைச்சரான நரேனை கழுத்தில் துண்டை போட்டுக்கொண்டு இழுத்து வருவது மாதிரியான காட்சி அமைக்கப்பட்டிருந்ததாம். அதே காட்சியை எச் வினோத் தமிழில் வேறு மாதிரியாக எடுத்திருக்கிறாராம். அதாவது சாட்டையை கழுத்தில் போட்டுக் கொண்டு இழுத்து வருவது மாதிரியாக இங்கு மாற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது ஏற்கனவே கில்லி படத்தில் விஜய் பிரகாஷ்ராஜ் கழுத்தில் துண்டை போட்டுக்கொண்டு ஜீப்பை ஒட்டிக்கொண்டு இழுத்து வருவார். அது மாதிரி ஜனநாயகன் படத்திலும் பிரகாஷ்ராஜின் கழுத்தில் சாட்டையை போட்டு இழுத்துக்கொண்டு வருவது மாதிரி இடம்பெற்று இ்ருப்பதாக சொல்லப்படுகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.