1. Home
  2. Cinema News

ஜனநாயகன் ரிலீஸ் தொகை இவ்வளவு கோடியா?!.. ஓவர் ரிஸ்க் எடுக்கும் AK64 புரடியூசர்!....

jananayagan
ஜனநாயகன் பட வியாபாரம் பற்றிய அப்டேட்

ஜனநாயகன்

Jananayagan: கோட் திரைப்படத்திற்கு பின் விஜய் நடித்திருக்கும் திரைப்படம்தான் ஜனநாயகன். கோட் படம் பாதி முடிந்த போது ‘அடுத்து நான் நடிக்கும் படமே எனது கடைசி படம். நான் அரசியலுக்குள் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளப் போகிறேன்’ என விஜய் அறிவித்து விட்டார். எனவே ஜனநாயகன் விஜயின் கடைசி படமாக கருதப்படுகிறது.

ஜனநாயகன் திரைப்படம் தெலுங்கில் பாலையா நடித்து வெளிவந்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொல்லப்பட்டாலும் விஜய்க்கு ஏற்றது போலவும், தமிழுக்கு ஏற்றது போலவும் இந்த படத்தின் கதை, திரைக்கதையில் சில மாற்றங்களை வினோத் செய்திருக்கிறார் என சொல்கிறார்கள். குறிப்பாக விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் அரசியல் தொடர்பான காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. வெளியான 2 போஸ்டர்களையும் பார்த்தாலே அது புரியும்.

2026 பொங்கலை முன்னிட்டு இந்த படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை கைப்பற்ற பலரும் முயற்சி செய்தார்கள். ஏஜிஎஸ், லலித் குமார் உள்ளிட்ட பலரும் மோத தற்போது அது ரோமியோ பிக்சர்ஸ் ராகுலுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த ரோமியோ பிச்சர்ஸ் ராகுல்தான் ஆதித் இயக்கத்தில் அஜித் அடுத்த நடிக்கவுள்ள புதிய படத்தின் தயாரிப்பாளர். ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமைக்கு 100 கோடி, கேரளா உரிமை 15 கோடி என இரண்டுக்கும் சேர்த்து 115 கோடி கொடுத்து இந்த உரிமையை வாங்கி இருக்கிறார் ராகுல்.

115 கோடிக்கு வாங்கியிருப்பது அதிக ரிஸ்க்காக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த படம் தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 225 கோடி வசூல் செய்தால் மட்டுமே போட்ட பணத்தை விட லாபம் கிடைக்கும் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். விஜயின் கடைசிப்படம் என்பதால் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும் என்கிற நம்பிக்கையில் ராகுல் இப்படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.