அப்பாவின் வாரிசு பிரபலத்தை நைசாக தூக்கிய ஜேசன் சஞ்சய்... அட ரணகளமா இருக்குமே!

JasonSanjay: விஜயின் மகன் இயக்க இருக்கும் முதல் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தற்போது ஒரு சூப்பர் அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

விஜயின் சினிமா கேரியர் தற்போது உருவாக இருக்கும் தளபதி69 படத்துடன் முடிய இருக்கும் நிலையில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்தனர்.

ஆனால் இந்த அறிவிப்பு வந்தபோது சஞ்சயுடன் விஜய் மற்றும் பிரபல இயக்குனரான அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என யாருமே இல்லை. இதுவே இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. அதை தொடர்ந்து பல யூகங்கள் இணையத்தில் வரிசை கட்டி நிற்கிறது.

அதுமட்டுமல்லாமல் முதல் அறிவிப்பு வந்த பின்னர் வேறு எந்த தகவலும் இணையத்தில் வெளியாகவே இல்லை. அடுத்த ஹீரோ யாராக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்தது. விஜய் சேதுபதி, கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் சந்தீப் கிஷன் தற்போது ஹீரோவாக நடிக்க இருப்பதாக ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படம் கிரிக்கெட் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட இருக்கிறது. விரைவில் ஷூட்டிங் குறித்த முதற்கட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இப்படத்தின் மியூசிக் டைரக்டராக தமனை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமன் கடைசியாக விஜயின் வாரிசு படத்திற்கு இசையமைத்து இருந்தார். படத்தில் எல்லா பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it