டிரெய்லரத்தான் நம்பி இருக்கோம்.. காப்பாத்துங்க சாமி!.. பிரதர் படத்துக்கு இப்படி ஒரு நிலமையா!..

by Murugan |
brother
X

brother

Jayam ravi: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. ஜெயம் படம் மூலம் நடிக்க துவங்கியவர் துவக்கத்தில் அண்ணன் ராஜா இயக்கத்தில் தெலுங்கு டப்பிங் படங்களில் நடித்து வந்தார். அதன்பின் மற்ற இயக்குனரின் படங்களில் நடிக்க துவங்கினார்.

பெரிய ஹிட் இல்லை என்றாலும் ஜெயம் ரவியை வைத்து படமெடுத்தால் ஒரளவுக்கு லாபம் என்பதால் பல தயாரிப்பாளர்களும் ரவியை வைத்து படமெடுக்க முன்வந்தனர். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரவி நடித்து வெளியான கோமாளி படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் ரவி நடித்து வெளியான பொன்னியின் செல்வன் படமும் ஹிட் படமாக அமைந்ததோடு சில தேசிய விருதுகளையும் பெற்றது. ஒருபக்கம், சொந்த வாழ்வில் சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார் ஜெயம் ரவி. மாமியாரின் இயக்கத்தில் சில படங்களில் நடித்தார். அதுவே, அவரின் திருமண வாழ்க்கைக்கு உலை வைத்துவிட்டது.


மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது விவாகரத்து வரை சென்றுவிட்டார் ரவி. ஒருபக்கம், மும்பையில் ஒரு தனி அலுவலகம் துவங்கி சினிமா தொடர்பான வேலைகளை அங்கிருந்தே செய்து வருகிறார். அவர் கடைசியாக நடித்த சில படங்கள் பெரிய வசூலை பெறவில்லை.

எனவே, இப்போது கையில் ஆறேழு படங்களை புக் செய்து நடித்து வருகிறார். ஒருபக்கம் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் முடிந்து தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கத்தில் உருவான ‘மக்காமிஷி’ பாடல் ஹிட் அடித்திருக்கிறது.

இந்நிலையில், பிரதர் படத்திற்கு இதுவரை பெரிய புரமோஷன் செய்யப்படவில்லை. டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் செய்யப்படும் புரமோஷன்தான் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் புரமோஷனுக்கு பணம் இல்லை என சொல்லப்படுகிறது மக்காமிஷி பாடல் ஹிட், தீபாவளிக்கு ரிலீஸ், மற்றும் விரைவில் வெளியாகும் டிரெய்லர் ஆகியவற்றால் படத்திற்கு ஓப்பனிங் இருக்கும் என நம்பி இருக்கிறார்களாம்.

Next Story