ஜெயம் ரவியின் கராத்தே பாபு படம் அந்த அமைச்சரோட கதையா? இது நடக்குமா?

பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். தன் பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். அடுத்து அவர் கராத்தே பாபு படத்திலும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
அந்த வகையில், ஜெயம் ரவியோட கராத்தே பாபு கதை திமுகவில் உள்ள அமைச்சர் சேகர்பாபு பற்றிய கதையா இருக்கும்கற மாதிரி சொல்லிருக்காங்க. ஆட்சியில இருக்குறவங்களைப் பற்றி எப்படி எடுக்க முடியும்னு ஆங்கர் ஒருவர் பிரபல அந்தனனிடம் கேள்வி எழுப்பினார்;. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
அமைச்சர் படமா?: பாபுன்னு வந்ததால சேகர் பாபுன்னு முடிச்சிப் போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன். திமுக அமைச்சரவையில முக்கியமான அமைச்சரா சேகர் பாபு இருக்கிறார். அவருக்குன்னு தனிப்பட்ட குணநலன்கள் எல்லாம் இருக்கு. அப்படிப்பட்ட சூழலில் அவரை மிமிக்ரி பண்ற மாதிரியோ, டார்கெட் பண்ற மாதிரியோ நிச்சயமா எடுத்திருக்க மாட்டாங்க.
சேகர் பாபுவா? கராத்தே தியாகராஜனா?: இது பொதுவான அரசியல் படமாகத் தான் இருக்கும்னு நான் நினைக்கிறேன். இன்னொன்னு கராத்தே தியாகராஜன்னு ஒருவர் இருக்கிறார். அவர் காங்கிரஸ் எம்எல்ஏ.வாக எல்லாம் இருந்துருக்காரு. ஏன் அவரோட கதையா இருக்கக்கூடாதுன்னு யாருமே கேட்கல. சேகர் பாபுவான்னு தான் பலரும் கேட்கிறாங்க. அதனால இரண்டு பேருமாகவே இருக்காதுங்கறது.
சுவாரசியமான கதை: அது ஒரு புதுக்கதையா இருக்கும். நிச்சயமா அது இந்தக் காலகட்டத்துக்கு ஏற்ப சுவாரசியமான கதையா இருக்கும். வடிவேலு ஒரு படத்துல வண்டு முருகனா நடிச்சிருப்பாரு. அந்த மாதிரி கேரக்டர் எந்தக் காலகட்டத்துக்குப் போட்டாலும் சரியாகத்தான் இருக்கும். ஆனா ஜெயம் ரவிக்கு வடிவேலு டைப்ல கதையைக் கொடுக்க முடியாது. கொஞ்சம் சீரியஸாகவும், கொஞ்சம் அரசியல் கலந்த படமாகவும் இருக்கும்.
பார்க்கணும்கற ஆவல்: மணிவண்ணன் காலத்துல எப்படி அமைதிப்படை வந்துச்சோ, பல அரசியல் படங்கள் எல்லாம் ஒரு காலத்துல வந்துச்சு. அவருக்குப் பிறகு மணிவண்ணன் மாதிரி டைரக்டர் வரலையேன்னு இருந்துது. இந்த டிரெய்லரைப் பார்த்ததும் இந்தப் படத்தைப் பார்க்கணும்கற ஆவல் வந்துட்டு. மணிவண்ணன் திரும்ப வந்துட்டாரோன்னு தோணுது. டயலாக், எடுக்கப்பட்ட விதம் எல்லாமே சூப்பர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.