விக்ரம் கூட போட்டிக்கு வந்த ஜெயம் ரவி!.. வீரதீரசூரனுக்கு ஒரு விடிவு காலமே இல்லையா?..

by Ramya |
vikram-ravi
X

Veera Dheera Sooran: நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன் . இயக்குனர் அருண்குமார் தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்றவை இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள்.

சித்தா திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் அருண்குமார் சீயான் விக்ரமை வைத்து புதிய முயற்சியாக வீரதீரசூரன் திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது பாகம் முதலில் ரிலீஸ்-ஆக இருக்கின்றது. பின்னர் முதல் பாகம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்கள்.


இதுவரை சினிமா வரலாற்றில் எந்த ஒரு திரைப்படமும் இப்படி வெளியானது கிடையாது. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மேலும் சீயான் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வர இருந்ததால் பொங்கல் ரேஸிலிருந்து விலகியது.

அதன் பிறகு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவில்லை என்று கூறிய பிறகு இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது மார்ச் 27ஆம் தேதி அதாவது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தார்கள்.

தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டிருந்த வீரதீரசூரன் திரைப்படம் நிச்சயம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கும் போட்டியாக ஒரு திரைப்படம் களமிறங்கி இருக்கின்றது. அதாவது நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எடுத்து முடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருக்கும் திரைப்படம் ஜீனி.



இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கேபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பல நாட்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை தற்போது தூசி தட்டி இந்த வருடம் மார்ச் 27ஆம் தேதி வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தற்போது வீரதீர சூரன் திரைப்படம் மற்றும் ஜீனி திரைப்படம் இரண்டும் ஒரே நாட்களில் வெளியாவதால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகித்தர்கள் ஏதாவது ஒரு திரைப்படத்தை மாற்றி வைக்கும்படி கூறி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனால் எந்த திரைப்படம் மார்ச் 27ஆம் தேதியிலிருந்து தள்ளி போகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story